விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ஸவை நேற்று முதல்
அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடைநிறுத்த
தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.பொலிஸ் நிதி மோசடி பிரிவு, பாதுகாப்பு அமைச்சினூடாக முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்றம் அலவி குறிப்பிட்டுள்ளார்.
CSN தொலைக்காட்சி சேவை குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அமைய யோஷித்த ராஜபக்ஸவை சேவையிலிருந்து இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment