Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | இளைஞர்கள் தங்களை சமூகத்துக்காக அர்ப்பணிக்க முன்வந்துள்ளமை மகிழ்ச்சி - கலாநிதி ஜெமீல்

-எம்.வை.அமீர்-
நான், உங்களையும் விட சிறுவனாக, கல்விப்பொதுத் தராதரம் எழுத இருந்த வேளையிலேயே முஸ்லிம் மாணவர் சம்மேளனம் என்ற அமைப்பின் கல்முனைக் கிளையின் தலைவராக 1988 ஆம் ஆண்டு சமூக நலப்பணிகளில் இணைந்து செயட்பட்டதனூடாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்ற ஒன்றையே எங்களால் உருவாக்க முடிந்தது. என்று நிகழ்வின் பிரதம அதிதியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

முஸ்லிம் இளைஞர் சமூக ஆய்வு மையம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு மாளிகைக்காடு விஸ்மில்லாஹ் வரவேற்பு மண்டபத்தில் 2016-06-11 ஆம் திகதி இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமும் விசேட அத்தியாக இளைஞர் பாராளமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.தில்ஷாத் மற்றும் அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை ,முனாஸ் முஹைடீன் ஆகியோருடன், இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அமைப்பின் தலைவர் இஸ்மாயில் இக்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மௌலவி எம்.ஏ.ஏ.எம்.ஷாஹிர் (ஹாஸிமி) அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி ஏ.எம்.ஜெமீல், அப்போது நாங்கள் ஒரு சிறுகுழுவாக செயற்பட்டதன் காரணமாக பல்வேறு பாரிய அடைவுகளை காணமுடிந்தது என்றால், இப்போது இங்கு எதிர்பாராத அளவுக்கு பெரிய இளைஞர் கூட்டமே குழுமியிருகிறீர்கள், நீங்கள் ஒன்றுபட்டால் நமது பிராந்தியம் எதிர்பார்க்கும் அனைத்து விடயங்களையும் இலகுவாக அடைந்துகொள்ள முடியும் என்றும், நமது மார்க்கம் காட்டிய வளியில் உளச்சுத்தியுடன் செயற்படுங்கள் எல்லாம் நமது காலடிக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget