Halloween Costume ideas 2015
Articles by "Action"
accdent Accident ACMC Action Addalaichchenai ADJF admission Adventure AIDS Akkaraipattu Akkaraippattu aleppo America ampara Apple aqua Aranayaka articles Australia Award Ball Bangladesh Batticaloa Breaking buddy budget Business Car chennai china CHOGM Cinema closed Colombo Commonwealth Computer Condolence corolla Crazy Mohan Cricket Crime Dawwa death Notice Dengue Download IP Address dubai dx Earth quake East Eclipse English English Local English News Eravur Exam finance Flat Roof flight flood Football France Galle General google habarana Harees Hiace HIV Hobby honda Hongkong House Hudaibiya ICC independence india Indonesia International Days invents Irakkaamam Iran Islam Islamabath Italy Jaffna Janaza Japan jawadh kalasem kalmunai Kandy Karaitivu kariappar Kattankudy ke 72 ke72 Kinniya Kurunegala kuwait labour day Land leisure LH 51 lifi loan lorry Maithripala sirisena maldives Malesia Maligaikadu Malta Mannar Maruthamunai Mawadipalli mayday MC mobile mobile phone Mothers Day mutur My Pet Navithanveli Navy Nepal news plus NewsPlus newzealand Nintavur nissan No-confidence motion Notice OBA Oddamawady OL Oluvil Pakistan Palamunai parliament Permit Pink Poem police Political Pottuvil President prime minister Pulmoddai Puttalam Qatar Racism rent RESPECT road sainthamaruthu sale sale or rent sammanthurai saudi saudi arabia Scholarship school Scotland seusl SLBF Slider SLMC Speed Sports sports local sri lanka srilanka Statement syriya T20 Asia Cup T20 World Cup Taiwan tajikistan Tamil Tamil Actor Profile Tamil Actress Profile Tamil News Tech Thalir toyota Traffic train Trinco Tsunami Turky UN Van Vanni Vehicle video VPN wagon westindies wifi Wilpattu world zahira College

விரைவில், தீகவாபி பிரதேசத்தில் பிரசவ வைத்தியப் பிரிவு ஒன்று திறக்கப்பட இருப்பதாகவும், அதற்கான உபகரணங்களை அயல் பிரதேசங்களிலிருந்து திரட்டும் நடவடிக்கையில்
சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு இன்று (11) ஒரு குளுவினர் வருகை தந்ததாகவும், அவர்கள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலிருக்கும் ஸ்கேன்னர் இயந்திரமொன்றை கொண்டு செல்ல முயற்சித்ததாகவும் நேரில் கண்டவர்கள் கலசம்.கொம் இற்கு தெரிவித்தனர்.

இது தொடர்பாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். பாரூக் அவர்களை கலசம்.கொம் தொடர்புகொண்டு வினவியது.

அதன்போது கருத்துத் தெரிவித்த அவர்.....

மேற்கூறப்பட்டது போன்ற ஒரு தகவல் தமக்கும் கிடைத்ததாகவும், குறித்த சம்பவம் இடம்பெறும்போது தாம் வேறு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததாகவும், சம்பவத்தை கேள்விப்பட்ட மாத்திரத்தில் அலுவலகத்துக்கு விரைந்து வந்ததாகவும், அங்கு விசாரித்தபோது  சரக்கிருப்புப் பரிசோதனை (inventory  checking) க்கான குழு வருகைதந்ததாக அறியக்கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

மேற்கூறப்பட்டதுபோல் ஒரு ஸ்கேன் இயந்திரம் உள்ளதா என வினவியதற்கு 
"ஆம்" அதன்மூலமாக தான் கற்பிணித்தாய்மார்களை தேவைக்கேற்ப பரிசோதிப்பதாகவும் தெரிவித்தார்.

எது எவ்வாறாயினும் சாய்ந்தமருதை பொறுத்தவரை இவ்வாறான துரோகத்தனங்கள் புதிதல்ல. 

அண்மையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியாகக் கிளையை கல்முனையில் இருந்து கொண்டுசெல்ல விடமாட்டோம் என்று குறுக்கும், நெடுக்குமாக அறிக்கைகள் விட்ட நமது பிராந்திய அரசியல் தலைமைகள், இன்று, அது அம்பாறைக்கு கொண்டுசெல்லப்பட்டதன் பின்னர் வாய்மூடி மௌனிகளாக உள்ளனர்.

அதுபோல், இதன் பின்னணியிலும் சில அரசியல் மறை கரங்கள் செயல்படுகின்றனவா? என்று மக்கள் மத்தியில் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. 

மக்கள் இப்பொழுது விழிப்படைந்துள்ளனர். "கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்யாமல்" நமது அரசியல் தலைமைகள் இது விடயமாக விழிப்படைந்து "வெள்ளம் வருமுன்னர் அணை கட்டுவார்களா?"

பெப்ரவரி 04, வெளிநாட்டுச் சக்திகளிடம் இருந்து இலங்கைத் தாய் சுதந்திரம் அடைந்த தினம். இதே தினத்தில் ரிஸானா நபீக்கை இலங்கைக்கு ஈந்த ரிஸானா நபீக்கின் தாய் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளால் விலங்கிடப்பட்டிருந்ததை அங்கு சென்ற பின்னர் அறிய முடிந்தது.
இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன், தாய், விறகு வெட்டிப் பிழைக்கும் தள்ளாத உடம்பு தகப்பன். இருக்கின்ற ஓட்டைக் குடிசை இவர்களைத் தாங்க முடியாத நிலையில் குடும்ப பாரத்தை ரிஸானா பொறுப்பெடுக்கிறாள். தனதும் தனது இரண்டு சகோதரிகளதும் எதிர்கால மாப்பிள்ளைகளுக்காக வீடு கட்டிக் கொடுக்க வேண்டிய சமூகக் கொடுமைக்காக வெளிநாடு  சென்று தனது  உயிரைக் கொடுக்கிறாள்.

“ரிஸானாவின் விடுதலைக்காக பலரும் முயற்சி செய்தார்கள். பல அரசியல்வாதிகளும் ரிஸானாவுக்காகவென்று பலமுறை சவூதி சென்று வந்தார்கள். நாங்களும் இரண்டு தடவை சவூதி சென்று சம்பந்தப்பட்டவர்களின் மன்னிப்புக்காக முயற்சி செய்தோம். 2007 ஜூலை 20 இல், லலித் கொத்தலாவல ரிஸானாவை சந்தித்து விட்டு வந்தபின் அவரை மீட்டுத் தருவதாகவும் அவரது தேவைப்படி வீடொன்று கட்டித் தருவதாகவும் சொன்னார். வீட்டை விட ரிஸானாதான் முக்கியம் என்று  சொன்னதன் பின்னர், அவர் ஒரு இலட்சம் ரூபா கொடுத்தார். அதனை வைத்து ஏற்கனவே இருந்த சில கடன்களை அடைத்தோம்” என்று கூறினார் ரிஸானாவின் தாய்.

ரிஸானா சிறையில் இருக்கின்ற காலங்களில் பல முஸ்லிம் அரசியல்வாதிகளுக் கும் சவூதிக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. “ரிஸானாவை சந்திக்க சவூதிக்குச் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கிருக்கின்ற எங்களது வீட்டுப் பக்கமும் வந்ததில்லை” என ஏமாற்றத்துடன் சொல்கிறார் ரிஸானாட உம்மா. (ரிஸானா அடைமொழியுடன் அவர் இப்படித்தான் தற்போது அறியப்படுகிறார்.)

ரிஸானாவின் பரிதாப முடிவுக்குப் பின்னர் ஏராளமானவர்கள் ஓடிவந்து தாராளமாக உதவி செய்திருக்கிறார்கள். “ஓரிரு நாட்களுக்கு முன்பு கூட காத்தான்குடி, கல்முனைப் பகுதிகளில் இருந்து மக்கள் வந்தார்கள். ஒரு ஜமாஅத்தினரும் கூட வந்து விசாரித்து விட்டுச் சென்றார்கள். எமது மக்கள் கொண்டு வந்து குவித்த உதவிகளில்தான் நாங்கள் சீவனோபாயம் நடத்திக் கொண்டிருக்கிறோம்” அவரது கண்கள் உதவியவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துப் பணித்தன.

ரிஸானாவின் குடும்பத்துக்கு உதவி செய்ய ஓடிவந்தவர்களில் ரிஸானாவின் குடும்பத்துக்குச் செய்த உதவிகளுக்கு மேலதிகமாக ரிஸானாவின் பெயரில் பொதுப் பணிகளையும் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். “ரிஸானாவுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட காலங்களில் கரடு முரடான ரிஸானாவின் வீட்டுக்கான பாதை வழியே வாகனங்கள் சாரி சாரியாக வந்து போய்க் கொண்டிருந்தன. இப்படி வந்தவர்களில் ஒரு ஹாஜியார் இந்தப் பாதைக்கு தார் போட்டு செப்பனிட்டுக் கொடுத்தார்” என்றார் மூதூர் ஸலாமா நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஸூஹ்ரி.
ரிஸானாவின் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள பள்ளிவாசலும் கூட ரிஸானாவின் பெயரால் ஐந்து இலட்சம் ரூபா செலவில் டைல்ஸ் இட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இராணுவத்தினரால் அந்தப் பிரதேசத்துக்கே இல்லாத வசதியான வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டைக் கொடுத்து ரிஸானாவின் ஒரு தங்கையை கரைசேர்த்து விட்டிருக்கிறார்கள். அரசாங் கம் 10 இலட்சம் ரூபா கொடுத்திருக்கிறது. இந்தப் பணத்தில் அடுத்த சகோதரிக்காக வளவு வாங்கி வீட்டுக்கான அத்திவாரம் போட்டிருக்கிறார்கள். அவர் இப்பொழுது புத்தளத்திலே படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு மாதாந்தம் செலவாகும் 8,000 ரூபாவையும் நிறுவனமொன்று பொறுப்பெடுத்திருக்கிறது.

மகனுக்கு திருகோணமலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் அப்போதைய அமைச்சர் டிலான் பெரேரா தொழில் வாய்ப்புப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இவர் திருமணம் முடித்துவிட்டால் தமது இருப்பிடம், சீவனோபாயம் எப்படி இருக்கப் போகிறது, அடுத்த மகளுக்கான வீட்டை எப்படிக் கட்டி முடிப்பது என்ற சமூகம் தலையில் கட்டிய பாரங்கள்தான் ரிஸானாவை பெற்றவர்களை தற்பொழுது அழுத்திக் கொண்டிருக்கிறது.

“சமுதாயமும் சிங்கள அரசியல்வாதி களும் இராணுவமும் உதவி செய்ததை மறக்க முடியாதது போலவே, முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏமாற்றியதையும் மறக்க முடியாது” ரிஸானட உம்மாவோட நடந்த உரையாடல் முழுக்க தொனித்த சோகமான யதார்த்தம் இது.

“அமைச்சர் ஹிஸ்புல்லா 10 இலட்சம் ரூபா சவூதியில் இருந்து கொண்டு வந்து எங்களிடம் தந்ததாகப் பேசப்பட்டது. அவர் எதுவும் எங்களுக்குத் தரவுமில்லை. நாங்கள் அவரைக் கண்டதுமில்லை, எங்களது வீட்டை அவர் கண்டதுமில்லை. இம்ரான் மஹ்ரூப் எம்.பி. ஐம்பது இலட்சம் தருவதாகவும், இரண்டு மகள்களுக்கும் டவுனுக்குள் வீடு கட்டித் தருவதாகவும் சொன்னார். அவரும் எதுவும் செய்யவில்லை. அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் 200,000 பெறு மதியான செக் ஒன்றும், 350,000 பெறுமதியான செக் ஒன்றும் கொடுத்தார்கள். அதில் இரண்டு இலட்சம் ரூபாவை காசாக்கினோம். 
மூன்றரை இலட்சம் ரூபா செக் ரிடர்ன் ஆகி விட்டது. காசு கிடைக்கவில்லை. 

நஜீப் எம்.பி. வீடு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி விட்டுச் சென்றார். அதன்பின் அவரைக் காணவேயில்லை” என்று இறந்த பின்னும் ரிஸானாவின் பெயரால் ஆயிரம் பொய்களைச் சொல்லி ஏமாற்றுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் பற்றி அடுக்கிக் கொண்டு போனார் ரிஸானாவின் தாய்.

இதைப் பற்றி ரஞ்சன் ராமநாயக்கவிடம் முறைப்பட்டோம். அவர் வருத்தமடைந்ததோடு 25,000 பணமும் எங்களுக்குத் தந்து ஆறுதல் சொல்லி அனுப்பினார் என்று ரிஸானாவின் தாய் கூறியபோது, ஏன் எல்லாவற்றையும் ரஞ்சன் ராமநாயக்கவிடம் முறையிடுகிறீர்கள் என்று கேட்டோம். அவர்தான் எங்களுடன் அக்கறையுடன் கதைக்கிறார். அவருடன் எந்த நேரம் கோல் எடுத்துப் பேசினாலும் கதைப்பார். வீடு கட்டித் தந்த ஆமிக்காரர் அடிக்கடி வருவார். விசாரிப்பார். எங்களது அரசியல்வாதிகள் போனை தூக்குவதே இல்லை. சொல்லப்பட்ட எல்லா அரசியல்வாதிகளதும் தொலைபேசி இலக்கங்கள் என்னுடைய போனிலே இருக்கிறது. முடிந்தால் இந்த போனிலிருந்து இப்பொழுது கதைத்துப் பாருங்கள் என்று சவால் விடும் தோரணையில் தைரியமாகச் சொன்னார் ரிஸானாட உம்மா.

இறந்தாலும் ஆயிரம் பொய் சொல்லிப் பிழைக்கின்ற அரசியல்வாதிகளை ரிஸானா நபீக்கின் விவகாரம் தட்டி எழுப்ப முடிந்தால் ரிஸானா இறந்தாலும் ஆயிரம் பொன் தான்.


காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது ஆகிய ஊர்களை ஊடறுத்து சாய்ந்தமருதில் கடலுடன் கலக்கும் இவ் ஊர்களின் பிரதான நீரகற்றும் ஆற்றின் இன்றைய நிலைதான் இது.



இக்கரச்சை ஆறானது தொடர்ந்தும் ஆற்று வாழைகளால் மூடப்படுவதும், அதனை பல இலட்சங்கள் செலவளித்து துப்பரவு செய்வதும் வாடிக்கையாக மாறிவிட்டது.



கடந்த பொது தேர்தலுக்கு முன்னதாக பல இலட்சங்கள் செலவு செய்து இதனை துப்பரவு செய்து ஒரு தேர்தல் கண்காட்சி காட்டப்பட்டது.



இதன் இரண்டாம் கட்டம் இடம்பெறும் என்றபோதிலும் இதுவரை அதை நினைத்தவர்கள் யாருமில்லை.



இதற்கு முன்னரும் ஒரு தடவை பல இலட்சங்கள் செலவில் இதன் துப்பரவு பணிகள் இடம்பெற்றிருந்தது.



இவ்வாறு, ஒரு முறையான திட்டமிடல் இன்றி இடம்பெறும் இதன் சுத்திகரிப்பு பணிகள் மூலம், அரசியல் வாதிகள் மக்கள் வரிப்பணத்தை காலா காலமாக வீணடித்து வருகின்றனர்.



எனவே இது தொடர்பில் உரியவர்களின் கவனம் திரும்புமா??



எது எவ்வாறாயினும், இக்கரச்சை ஆற்றினால் கொந்தராத்துக் காரர்களின் பாடு கொண்டாட்டம்தான் போங்க...








-எம்.ஐ.எம்.அஸ்ஹர்-


மாளிகைக்காடு சந்தியில்
அமையப்பெற்றுள்ள பகுதியை சுற்றுவட்டமாக பிரகடனப் படுத்தியவர்கள் யார் ?





விசயமறியாத 30
இற்கும மேற்பட்ட அப்பாவி சாரதிகள் பலர் இன்று  ( 7 ) அம்பாறை  வீதி போக்குவரத்து பொலிசாரின் தண்டனைக்கு உள்ளாகினர்


மாளிகைக்காடு சந்தி
பல வகையிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.ஒரு புறம் பொத்துவில் தொகுதியையும்
மறுபுறம் கல்முனைத் தொகுதியையும் , ஒரு புறம் கல்முனை பொலிஸ் பகுதியையும் மறுபுறம்
, சம்மாந்துறை பொலிஸ் பகுதியையும் , ஒரு புறம் கல்முனை மாநகரசபை எல்லையையும் மறுபுறம்
காரைதீவு பிரதேச சபையயும் , ஒரு புறம் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவினையும் , மறுபுறம்
காரைதீவு பிரதேச செயலகப் பிரிவையும் கொண்டுள்ளது.





மாளிகா வீதி கடற்கரை
வீதியில் இருந்து ஆரம்பமாகி அக்கரைப்பற்று – அம்பாறை பிரதான வீதியில் முடிவடைகின்றது.
இவ்வீதியனால் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். கடந்த சுனாமி அனர்தத்தின்
பின்னர் சாய்ந்தமருது தாமரை விளையாட்டு மைதானம் இருந்த இடத்தில் சாய்ந்தமருது மாவட்ட
வைத்தியசாலை அமையப் பெற்றது. இவ் வைத்தியசாலைக்கு நோயாளிகள் வருவதற்கும் ஏனைய வாகனங்கள்
வருவதற்குமாக பாதையொன்று பிரதான வீதி வழியாக அமைக்கப்பட்டது.


ஆனால் அந்த பகுதியை
சுற்றுவட்ட பகுதியாக வீதி போக்குவரத்து பொலிஸார் தன்னிச்சையாக பிரகடனப்படுத்திக் கொண்டு
பொது மக்களுக்கு எந்தவித முன்னறிவித்தலுமின்றி அந்த சுற்று வட்ட பாதையில் பயணிக்கும்
வாகன சாரதிகளை நிறுத்தி வீதி போக்குவரத்து விதிகளை மீறியுள்ளமையால் தண்டனைக்கு உட்படுத்துவதாக
கூறி தண்டப்பணம் செலுத்துவதற்கான சிட்டுகளை வழங்கி வருகின்றனர்.





இவ்விடயம் சம்பந்தமாக
இப்பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை அறிவித்தும் எந்த நடவடிக்கைகளும்
இதுவரை எடுக்கப்படவில்லையென தெரிவித்தனர்.





எது எவ்வாறு இருந்தாலும்
ஒரு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன் அவ்விடயம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு அறிவிக்க
வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். இச் சுற்று வட்டம் சம்பந்தமா பிரதான வீதியிலோ அல்லது
குறிப்பிட்ட இடத்திலோ எந்தவிதமான அடையாங்களோ வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இடப்படவில்லை
என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.





 





குற்றம் சுமத்துவது இலகு.. அதை செய்து முடிப்பது கடினம்..
என்பதற்கு இந்த வீடியோ சிறந்த உதாரணமாகும்






இது 2014 ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி பதிவிடப்பட்ட ஒரு செய்தியாகும், இது தொடர்பில் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.



இதில் இதில் கருத்து தெரிவித்திருக்கும் சிராஜ் அஹமட் என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மிக நெருங்கிய உறவைப் பேனும் ஒருவர். அந்த வகையில், ஆட்சி அதிகாரம் பட்டம், பதவி ஐ.தே.க. வின் கைக்கு வந்து ஓராண்டுகள் கடந்தும் இவ் வீதியின் அவல நிலை இவ்வாறே தொடர்கிறது



எனவே சிராஜ் அஹமட் இற்கு ஒரு நினைவூட்டலாக இவ்வீடியோ காட்சியினை மீள் பதிவிடுகின்றோம் ...




http://www.tv.kalasem.com/2016/02/mersa-road-junctio.html



Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget