Halloween Costume ideas 2015
Articles by "ACMC"
accdent Accident ACMC Action Addalaichchenai ADJF admission Adventure AIDS Akkaraipattu Akkaraippattu aleppo America ampara Apple aqua Aranayaka articles Australia Award Ball Bangladesh Batticaloa Breaking buddy budget Business Car chennai china CHOGM Cinema closed Colombo Commonwealth Computer Condolence corolla Crazy Mohan Cricket Crime Dawwa death Notice Dengue Download IP Address dubai dx Earth quake East Eclipse English English Local English News Eravur Exam finance Flat Roof flight flood Football France Galle General google habarana Harees Hiace HIV Hobby honda Hongkong House Hudaibiya ICC independence india Indonesia International Days invents Irakkaamam Iran Islam Islamabath Italy Jaffna Janaza Japan jawadh kalasem kalmunai Kandy Karaitivu kariappar Kattankudy ke 72 ke72 Kinniya Kurunegala kuwait labour day Land leisure LH 51 lifi loan lorry Maithripala sirisena maldives Malesia Maligaikadu Malta Mannar Maruthamunai Mawadipalli mayday MC mobile mobile phone Mothers Day mutur My Pet Navithanveli Navy Nepal news plus NewsPlus newzealand Nintavur nissan No-confidence motion Notice OBA Oddamawady OL Oluvil Pakistan Palamunai parliament Permit Pink Poem police Political Pottuvil President prime minister Pulmoddai Puttalam Qatar Racism rent RESPECT road sainthamaruthu sale sale or rent sammanthurai saudi saudi arabia Scholarship school Scotland seusl SLBF Slider SLMC Speed Sports sports local sri lanka srilanka Statement syriya T20 Asia Cup T20 World Cup Taiwan tajikistan Tamil Tamil Actor Profile Tamil Actress Profile Tamil News Tech Thalir toyota Traffic train Trinco Tsunami Turky UN Van Vanni Vehicle video VPN wagon westindies wifi Wilpattu world zahira College

http://www.paylot.lk/-எம்.வை.அமீர், கே.காலீத்தீன்-
ஒரு மதகுருவும் அவரோடுசேர்ந்த ஒருசில திருடர்கள் கூட்டமும் சேர்ந்து நாட்டில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை  அமைச்சருமான றிஷாத் பதியூதீன் தெரிவித்தார். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இப்தார் இன்று (10)  அக்கட்சியின் பிரதித் தலைவரும் லக்சல நிறுவனத்தின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் சம்மாந்துறை திறந்த வெளியில் இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் றிஷாத் பதியூதீன் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றுகையில்:

சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைப்பதற்காக ஒருமாதகாலத்துக்குள் 20 ஏக்கர் காணியை மஜ்லிஸ் சூறாவிடம் கோரியதாகவும் அவர்கள் நல்ல முடிவை தருவதாக கூறியுள்ளதாகவும், . தற்போது முஸ்லிம் உலகம் இரண்டாகப்பிரிந்துள்ளதை முஸ்லிம் உலகம் வேதனையுடன் நோக்குகின்ற இவ்வேளையில், இந்த நாட்டிலே நல்லாட்சியைக் கொண்டுவருவதற்காக இலங்கையில் உள்ள இரண்டாயிரம் பள்ளிகளின் மிம்பர்களும் அதேபோல உலமாக்கள், கற்றசமூகம் மற்றும் இளைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் ஒன்றுபட்டு பாடுபட்டுஆட்சியை நிறுவியபோதிலும், இந்த ஆட்சியில் அண்மைக்கால சம்பவங்கள் எங்களை வேதனையடையச் செய்துள்ளன. இப்போது ஒவ்வொரு சாகர் நேரத்திலும் கலிமாச்சொன்ன ஒருவரது கடைகள் அல்லது சொத்துக்கள்  எரியூட்டப்படுகின்ற செய்திகள்தான் அண்மைக்காலமாக வந்துகொண்டிருக்கின்றது என்றும்,
ஒரு மதகுருவும் அவரோடுசேர்ந்த ஒருசில திருடர்கள் கூட்டமும் சேர்ந்து இந்த நாட்டிலே நின்மதியாக வாழ்ந்தது வந்த பெரும்பாமமை சமூதாயத்தையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு முஸ்லிம்களுடைய பொருளாதாரத்தை காவுகொள்வதற்காக, முஸ்லிம் சமூதாயத்தை அடிமைப்படுத்துவதற்காக, முஸ்லிம் சமூதாயத்துடைய நின்மதியைக் குழப்புவதற்காக செய்துவருகின்ற சதியை நீங்கள் அறிவீர்கள் என்றும் இந்த ஆட்சியாலர்களிடத்திலே ஒருகட்சியுடைய தலைவர் என்ற வகையிலும், ஐந்து பாராளமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்ற ஒருகட்சி என்ற அடிப்படையிலும், அதிகபட்ஷ ஆதரவைக்கொடுத்த சமூகம் சார்ந்த கட்சி என்ற அடிப்படியிலும், இந்த நாட்டின் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பொலிசுக்கு பொறுப்பான அமைச்சர், பொலிஸ்மா அதிபர் போன்றவர்களை தனித்தனியாக சந்தித்தும் கூட்டாகச்சந்தித்தும் எங்களுடைய சமூதாயத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலையையும் இப்போது நமது சமூகம் எதிர்பார்ப்பதையும் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுங்கள் என்ற விடயத்தை சொல்லவேண்டிய எல்லா வழியிலும் நாங்கள் சொல்லியிருக்கின்றோம் என்றும் இந்த சமூகக்கடமையை அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்தவர்களாக நாங்கள் செய்து இருக்கின்றோம் செய்து வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை சுமந்துள்ள பொலிசார் இன்று காவலர்களாக இருந்துகொண்டு தனதுகடமையைச் சரியாக செய்யாததனால் இங்கு எங்களுடைய சொத்துக்கள் அழிந்துகொண்டிருக்கின்றது. எனவே நாட்டின் சட்டதிட்டங்களை பேணி எங்களுடைய பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு  இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் சார்பாக சம்மந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோல் விடுப்பதாகவும் தெரிவித்தார்.  
சகோதரர்களே! நமது சகோதரர்களின் பாதுகாப்புக்கு இப்புனித ரமழானில் அல்லாஹ்விடம் அதிகம் அதிகமாக துஆக்களை கேட்கவேண்டியுமுள்ளது என்றும் கேட்டுக்கொண்டார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல், கட்சியின் செயலாளர் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் கல்வியாளர்கள் உலமாக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இப்தார் நிகழ்வின்போது அஷ்செய்க் ஏ.பௌஸி (தப்லீகி) அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றியது குறிப்பிடத்தக்கது.

http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/ 

-இன்ஷாப்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்திற்கான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் செயலமர்வு மற்றும் கலந்துரையாடல் இன்று (04) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன், தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, செயளாலர் சுபையிதீன் ஹாஜி, பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப், திணைக்கள தலைவர்களான வீ.சீ. இஸ்மாயில், சிராஸ் மீராசாஹிப், எஸ்.எஸ்.பி. மஜீத், ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.



-அஸ்லம் எஸ்.மௌலானா-
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஸ்தாபிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா மேற்கொண்டு வருகிறார் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை விடயமாக அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியபோது இதனை நேரடியாக கண்டுகொள்ள முடிந்தது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தலைமையில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் என்னுடன் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளர் ஏ.எல்.எம்.அன்வர் ஆகியோரும் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, மேலதிக செயலாளர் எம்.எம்.நயீமுடீன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

இது தொடர்பில் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் மேலும் தெரிவிக்கையில்;

"எமது சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் இருந்து நாம் பின்வாங்கவில்லை. எனினும் அதனை வென்றெடுப்பதற்காக சில சந்தர்ப்பங்களில் இரகசியம் பேண வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அதனால்தான் நான் தனியாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடனும் சென்று அடிக்கடி அமைச்சர் பைஸர் முஸ்தபாவை இது விடயமாக சந்தித்து பேசுவதை ஊடகங்களுக்கு மாத்திரமல்லாமல் எனக்கு நெருங்கியவர்களிடம் கூட வெளிப்படுத்தாமல் இரகசியம் பேணி வந்தேன்.

எனினும் தற்போது இவ்விடயம் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கின்ற சூழ்நிலையில் உங்கள் போன்ற ஊடகவியலாளர்கள் இம்முயற்சி கைவிடப்பட்டு விட்டதா என்று என்னிடம் கேட்கின்றபோது உண்மைகளை மூடி மறைக்க முடியாமல் இத்தகவலை வெளிப்படுத்துகின்றேன்.   

எல்லை மீள் நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வெளியிடுவதற்காக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அவரை நாம் சந்தித்து, சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியபோது அமைச்சரும் அங்கிருந்த அமைச்சின் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர் ஆகியோரும் இது தொடர்பில் எடுக்கப்பட்டு வருகின்ற நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை எமக்கு எடுத்துக்கூறினர்.

அதன் பிரகாரம் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி பிரகடனத்தை அமைச்சர் பைஸர் முஸ்தபா விரைவில் வெளியிடுவார் என நான் திடமாக நம்புகின்றேன்.

அதேவேளை இதனைத் தடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கு வழியில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. அதாவது சாய்ந்தமருது உள்ளூராட்சி விடயத்தை முன்னெடுக்க வேண்டாம் என அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் நேரடியாக சொல்லி தடுக்க முடியாது என்பதனால் தமிழ் தரப்பினரை பிழையாக வழிநடத்தி, அவர்கள் மூலம் உள்ளூராட்சி அமைச்சர் தொடக்கம் பிரதமர், ஜனாதிபதி வரை இதற்கெதிராக முறையிட்டு மகஜர்களை அனுப்பச் செய்து தமது சாணக்கியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனால் இவ்விடயமாக அமைச்சருக்கு எழுந்திருந்த சந்தேகத்தை நாம் நிவர்த்தி செய்திருப்பதனால் அவர் மேற்கொண்டுள்ள பூர்வாங்க ஏற்பாடுகள் நிறுத்தப்படாமல், தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

முன்னர் கல்முனைக்குடி மக்களை தூண்டி விட்டு, குழப்பிய இவர்கள், தற்போது அந்த மக்கள் சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளூராட்சி சபை கொடுக்க வேண்டியதன் நியாயத்தை புரிந்து கொண்டு, அவர்களும் இதனை ஆதரிக்க முன்வந்துள்ள சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை குழப்புவதற்கு எத்தனித்துள்ளனர்.     

கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது கல்முனை நகரில் இடம்பெற்ற தமது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சாய்ந்தமருது மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக  பிரதமர் ரணிலைக் கொண்டு தேர்தல் முடிந்த கையோடு சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை உருவாக்கித்தரப்படும் என்று பிரதமரின் நாவினால் ஓர் உறுதிமொழியை மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் வழங்கியிருந்தார். 

ஆனால் ஒன்னறரை வருடம் கடந்தும் கூட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இது தொடர்பில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை என்பதும் உள்ளூராட்சி அமைச்சருக்கு பிரதமர் எவ்வித பரிந்துரையும் செய்யவில்லை என்பதும் மு.கா.வின் நாடகத்தையும் நயவஞ்சகத்தனைத்தையும் அளவிட போதுமான சான்றாகும்.

அதேவேளை அமைச்சர் பைஸர் முஸ்தபாவை நாம் சாய்ந்தமருத்துக்கு அழைத்து வந்து அவர் பகிரங்க உத்தரவாதம் வழங்கியதுடன் மு.கா.வின் படம் காட்டல் நாடகத்தை அம்பலப்படுத்தியதனால் ஆத்திரமடைந்த ரவூப் ஹக்கீம், இனிமேல் உள்ளூராட்சி அமைச்சரும் அவரை அழைத்து வந்தோரும் முடியுமானால் இந்த உள்ளூராட்சி சபையை பெற்றுக்கொடுக்கட்டும் என்ற தோரணையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டு எம்பக்கம் பந்தை அடித்து விட்டிருந்தார்.

இந்நிலையில் நாம் எமது முயற்சிகளை வீரியமாக்கி, உள்ளூராட்சி அமைச்சருடன் பிண்ணிப்பிணைந்து, தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம். விரைவில் அதன் அறுவடையை கண்டுகொள்ள முடியும்.

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக்கான எமது போராட்டம் நான் பிறந்த மண்ணுடன் கலந்த உணர்வின் உந்துதலாகும். அந்த உள்ளூராட்சி அதிகாரத்தை சாய்ந்தமருது மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு என்ன விலை கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன். 

மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீமும் பிரதி அமைச்சர் ஹரீஸும் இனியாவது இதனைத் தடுக்கின்ற முயற்சிகளை கைவிட்டு, உங்களை முழுமையாக ஆதரித்து அதிகார பதவிகளில் இருத்தியமைக்காகவேனும் சாய்ந்தமருது மக்களுக்கு உபத்திரம் செய்யாமல், மனச்சாட்சியுடன் நடந்து கொள்ளுமாறு அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன்." என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டார். 

-அஸீம் கிலாப்தீன்- 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தோப்பூர் மத்திய குழு அலுவலக திறப்பு விழா மற்றும் அந்த பிரதேசத்தில் சுய தொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (12) தோப்பூரில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொணடார்.
இந்நிகழ்வில் பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான், முன்னாள் பிரதியமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன், டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டர்.



https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தனியான உள்ளூராட்சி மன்றம் நிச்சயம் வழங்கப்படும் என்று, உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா நேற்று (21) இரவு சாய்ந்தமருது நகர மத்தியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் 8வது கிளை நேற்று (21) சாய்ந்தமருது நகரில் அதன் தலைவர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஸார்ட் பதியுத்தீன், உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

அதன்பின்னர் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் அங்கு ஆற்றிய உரை கீழே வீடியோ காட்சியாகத் தரப்படுகின்றது..

வீடியோ
 http://www.tv.kalasem.com/2016/10/min-faizar-musthaffas-speach-regarding.html

 


-எம்.வை.அமீர்-
கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி கடற்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என கட்டப்பட்ட  நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை, இன்னும் ஒரு மாதத்துக்குள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

சாய்ந்தமருது கடலின் அடிப்பரப்பில் தேங்கியுள்ள சுனாமியினால் கொண்டுசெல்லப்பட்ட ‘கல்’ போன்ற எச்சங்களை துப்பரவு செய்யும் வேலைத் திடடத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த அம்பாறை மாவடடத்திற்கான இப்தார் நிகழ்வும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா. குழுத்தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நேற்று (24) அங்குராப்பன நிகழ்வு சாய்ந்தமருது கடற்கரையிலும், இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலய முற்றத்திலும்  இடம்பெற்றது. 

இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் றிஷாத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு ஆற்றிய உரையின் ஒரு பகுதி வீடியோ காடசியாகத் தரப்படுகிறது. 
 

-அஸ்ஹர் இப்றாஹிம்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் ஏற்பாட்டின் பேரில் அம்பாறை மாவட்டத்திற்கான கட்சியின் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலய மைதானத்தில் இன்று ( 24)இடம்பெற்றது.

 
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சருமான றிஸாத் பதியுதீன் , கடசியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ருப் , கட்சியின் முக்கியஸ்தர்கள் , உலமாக்கள் , கல்வியாளர்கள் , வர்த்தக பிரமுகர்கள் , இளைஞர்கள் என ஆயிரக் கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர்.

 

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget