Halloween Costume ideas 2015
Articles by "Maruthamunai"
accdent Accident ACMC Action Addalaichchenai ADJF admission Adventure AIDS Akkaraipattu Akkaraippattu aleppo America ampara Apple aqua Aranayaka articles Australia Award Ball Bangladesh Batticaloa Breaking buddy budget Business Car chennai china CHOGM Cinema closed Colombo Commonwealth Computer Condolence corolla Crazy Mohan Cricket Crime Dawwa death Notice Dengue Download IP Address dubai dx Earth quake East Eclipse English English Local English News Eravur Exam finance Flat Roof flight flood Football France Galle General google habarana Harees Hiace HIV Hobby honda Hongkong House Hudaibiya ICC independence india Indonesia International Days invents Irakkaamam Iran Islam Islamabath Italy Jaffna Janaza Japan jawadh kalasem kalmunai Kandy Karaitivu kariappar Kattankudy ke 72 ke72 Kinniya Kurunegala kuwait labour day Land leisure LH 51 lifi loan lorry Maithripala sirisena maldives Malesia Maligaikadu Malta Mannar Maruthamunai Mawadipalli mayday MC mobile mobile phone Mothers Day mutur My Pet Navithanveli Navy Nepal news plus NewsPlus newzealand Nintavur nissan No-confidence motion Notice OBA Oddamawady OL Oluvil Pakistan Palamunai parliament Permit Pink Poem police Political Pottuvil President prime minister Pulmoddai Puttalam Qatar Racism rent RESPECT road sainthamaruthu sale sale or rent sammanthurai saudi saudi arabia Scholarship school Scotland seusl SLBF Slider SLMC Speed Sports sports local sri lanka srilanka Statement syriya T20 Asia Cup T20 World Cup Taiwan tajikistan Tamil Tamil Actor Profile Tamil Actress Profile Tamil News Tech Thalir toyota Traffic train Trinco Tsunami Turky UN Van Vanni Vehicle video VPN wagon westindies wifi Wilpattu world zahira College

-ஏ.எல்.எம்.ஷினாஸ்-
மருதமுனை CHILD FIRST ஆங்கிலக் கல்லூரியின் 14 வது வருடாந்த ஆண்டு நிறைவு கலாசார விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் அண்மையில்  மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் அஷ்ரப் ஞாபகார்த்த அரங்கில் நடைபெற்றது.

கல்லூரியின் தலைவரும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஆங்கில மொழிப் பிரிவின் தலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான கலநிதி Dr.ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்லூரியின் பெற்றோர்களான சத்திர சிகிச்சை நிபுணர்  Dr. சித்தீக் ஜெமீல்ஸ்,  தென்கிழக்கு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறைத் தலைவர் எம்.எம்.பாஸில் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் ஏனைய பெற்றோர்கள் விசேட சிறப்புக்குரிய அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
LKG, UKG மாணவர்களின் கலை-கலாசார நிகழ்சிகளும் இங்கு அரங்கேற்றப்பட்டன.

 

ஷம்ஸ் மத்திய கல்லூரியின் க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் விஞ்ஞான பாட விசேட செயத் திட்டத்திட்கும் மற்றும் அல்-மதீனா வித்தியாலய புலமைப்பரிசில் பரீடசை பிரிவு மாணவர்களின் விசேட கல்வி செயட்பாடுகளுக்குமாக  மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தினால் (SESEF) நிதி உதவிகள் வழங்கிவைக்கபட்டது.

கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின்(SESEF), விசேட நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அண்மையில் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்திட்கு அதிதியாக கலந்து கொண்ட  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். ஏ.றசாக் (ஜவாத்) அவர்கள் காசோலைகளை  சம்பிரதாய பூர்வமாக பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் அமைப்பின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எப்.ஹிபதுல் கரீம், பிரதம ஆலோசகர் எ.எச்.எம்.அன்சார், செயற்பாட்டு பணிப்பாளர் எம்.ஐ.எம்.வலீத், நிதிப் பணிப்பாளர் எம்.எப்.எம். மர்சூக், ஆகியோரும் கலந்து கொண்டனர்

இக்கூட்டத்தில் அமைப்பின் கல்வி செயட்பாடுகளுக்காக அனுசரணையாளர்களாகவிருந்த அமைப்பின் ஆலோசகர்களில் ஒருவரான தொழில் அதிபர் ஏ. எம்.கமால்தீன் B .Com, கலாநிதி எ.எ.நுபைல், எஸ்.எல்.பி உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

ஷம்ஸ் மத்யகல்லூரிக்கு ரூபாய் 25,௦௦௦/- உம் , மதீனாவுக்கு 30 ,௦௦௦/- உம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்




http://www.paylot.lk/-ஏ.எல்.எம்.ஷினாஸ் - 
கல்முனை பிரதேச செயலகத்தின் சமூர்த்தி சிறுவர் கழக கலை - கலாசார போட்டி நிகழ்ச்சிகள் மருதமுனை சமூர்த்தி வங்கி அலுவலகத்தில் முகாமையாளர் எம்.எம்.எம்.முபீன் தலைமையில் அண்மைமையில் நடைபெற்றது. 

இதில் சமூர்த்தி முகாமையாளா் எஸ்.எல்.அஸீஸ், பிரதேச சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பெருமளவான மாணவர்களும் கலந்து கொண்டனர்.

http://www.paylot.lk/http://www.paylot.lk/ 

http://www.paylot.lk/-ஏ.எல்.எம்.ஷினாஸ்-
மருதமுனை எவரடி விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று (04) பெரியநீலாவணை அக்பர் வித்தியாலையத்தில், கழகத்தின் தலைவா் இறைவரி திணைக்களத்தின் உதவி ஆணையாளா் எம்.ஐ.முஹம்மட் உவைஸ் தலைமையில் நடைபெற்றது.

விசேட மாா்க்க செற்பொழிவை இஸ்லாமிய பிரச்சார மையத்தின் செயலாளா் அஷ்ஷெய்க் எஸ்.எச்.முஜிப்(ஸலபி) நிகழ்த்தினாா்.

இதில் பிரதேசத்தின் முக்கிய அதிதிகள், கல்விமான்கள் எனப் பலரும் கலந்து கொண்டனா்.

http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/ 

http://www.paylot.lk/-ஏ.எல்.எம்.ஷினாஸ்-
மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின்(SESEF) நிதி உதவியுடன் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் இம்முறை க.பொ.தர/சாதரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு நேற்று முன்தினம் (14) ஷம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
 
நிகழ்வில் அதிபர் எஸ்.எம்.எம்.அமீர், கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் தலைவரும் சப்ரகமுவ பல்கலைக்கழக பதிவாளருமான எம்.எப். ஹிபத்துல் கரீம், மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கோட்டக்கல்வி அதிகாரி ஜிஹானா ஆலிப், தெ. கி.ப.பொறியியல் பீடாதிபதி எஸ்.எம்.ஜூனைத்தீன், பொறியியலாளர் பஸீல், பிரதி அதிபர்களா எம்.எம்.ஹிர்பகான், எம்.எம்.முஸர்ரப்,SESEF அமைப்பின் செயட்பாடுப் பணிப்பாளரும்  ஏசியா பவுண்டேசன் நிகழ்ச்சித் திட்ட அதிகாரியுமான  எம்.ஐ.எம்.வலீத், SESEF அமைப்பின் நிதிப்பணிப்பாளர் எம்.எப்.மர்சூக் உட்பட அமைப்பின் உயர் அதிகாரிகள் ,உப அதிபர்ள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/

http://www.paylot.lk/-ஏ.எல்.எம்.ஷினாஸ்-
மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின்(SESEF) நிதி உதவியுடன் அல்மனார் மத்திய கல்லூரியில் இம்முறை க.பொ.த சாதரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு அண்மையில் அல்-மனார் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
 
நிகழ்வில் அதிபர் எம்.ஏ.எம். இனாமுல்லா, கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் தலைவரும் சப்ரகமுவ பல்கலைக்கழக பதிவாளருமான எம்.எப். ஹிப்பத்துல் கரீம், கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எல்.சக்காப், ஏசியா பவுண்டேசன் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் உட்பட கல்வி அதிகாரிகள் பல கலந்து கொண்டனர்.
 
http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/

http://www.paylot.lk/-ஏ.எல்.எம்.ஷினாஸ்-
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய பாணவர்கள் ஏற்பாடு செய்த சுகாதார வைத்திய முகாம் இன்று நடைபெற்றது.

 "ஷம்ஸ் தினம் - 2017 "நாளை (30.04.2017) பாடசாலை வளாகத்தில் பாடசாலையின் பழைய மாணவனும் அதிபருமான எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் திட்டமிடல் பணிப்பாளா் எஸ்.அன்வரதீன் அரங்கில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு பாடசாலையின் பழைய மாணவர்கள் தற்போது வைத்தியர்களாகவும், தாதியர்களாகவும் மற்றும் சுகாதார பிரிவுகளிலும் சேவையாற்றும் உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த " சுகாதார வைத்திய முகாம்" இன்று (29) பாடசாலையில் நடைபெற்றது.

01. தொற்று மற்றும் தொற்றா நோய்
02. பல் வைத்தியம்
03. பொதுச் சுகாதாரம் போன்ற சேவைகள் இங்கு வழங்கப்பட்டன.
இதற்கான மேலதிக ஆதரவு, ஒத்துழைப்புக்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, மருதமுனை வைத்தியசாலை போன்றன வழங்கியிருந்தது.

இதில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் போன்ற 300க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இந்த சேவை குறித்து 
பாடசாலையின் பழைய மாணவரும் பிறை எப்.எம்.நிலையக் கட்டுப்பாட்டாளருமான அல்-ஹாஜ் பஸீர் அப்துல் கையும் இலங்கை வானொலி பிறை எப்.எம் இல் நேரடி அஞ்சல் செய்தாா். பழைய மாணவா்களான மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப், மட்டக்களப்பு பிராந்திய பல்வைத்திய அதிகாரி டாக்டர். எம்.பி.ஏ.வாஜித், அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் கல்முனை மாநகர ஆணையாளர்.ஜே.லியாக்கத்அலி, சட்டத்தரணிகளான.எம்.சி.எம்.நவாஸ், எம்.எம்.றமீஸ், பொறியியலாளா்களான எம்.ஏ.யாசிர் றஸ்மி, ஜவ்பர், துறைமுக அதிகார சபை உத்தியோகத்தா் ஏ.எச்.நைசா் உட்பட உயா் அதிகாரிகள், மாணவா்கள்,ஆசிரியா்கள், பெற்றோா்கள் எனப் பலா் கலந்து கொண்டனா்.

http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/ 

http://www.paylot.lk/
-ஏ.எல்.எம்.ஷினாஸ்- மருதமுனை-
இலங்கை, இந்திய கலை, கலாசார, கல்வி, பண்பாட்டு அம்சங்களில் வரலாற்றுக் காலத்தில் இருந்து இரு நாட்டு முஸ்லிம்களும் இறுக்கமான உறவுகளையும், தொடர்புகளையும் பேணி வருவதாக தமிழ்நாடு மனித நேயக் கட்சியின் தலைவரும், முனைவருமான பேராசிரியர் எம்.எச்..ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார்.

மருதமுனை அந்-நஹ்லா அரபுக் கல்லூரியின் போதனாசிரியர்கள், உலமாக்களுக்கிடையிலான சந்திப்பு அந்-நஹ்லா அரபுக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் இவ்வாறு தெரிவித்தாா். தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையில் சிறுபான்மையான முஸ்லிம்கள் இந்திய முஸ்லிம்களோடு ஒப்பிடும் போது இலங்கையில் நிறைய உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவித்து வருகின்றனர். அதேவேளை,20 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழும் இந்தியாவில் மதச் சார்பற்ற அரசு முஸ்லிம்களை எல்லாத் துறைகளிலும் வேறுபடுத்திப் பார்க்கின்ற போக்கை அவதானிக்கும் போது இலங்கை முஸ்லிம்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றே கூற வேண்டும்.

விடுதலைப் போராட்ட காலங்களில் முஸ்லிம் மக்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்த போதும்2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட போதும் தொப்புள்கொடி உறவைத் தமிழக முஸ்லிம்கள் வெளிப்படுத்தியதோடு இலங்கையில் ஏற்படும் ஒடுக்கு முறைகள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளாகப் பிரதிபலிக்கு போது எனது தலைமையிலுள்ள மனித நேயக் கட்சி குரலெழுப்பியும், வெகுஜனப் போராட்டங்களையும் முன்னின்று நடாத்தியமை எமது இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

2015 டிசம்பரில் பெரும் வெள்ளம் சென்னையை மூழ்கடித்த போது பாதிக்கப்பட்ட அதிக தமிழ் மக்கள் எமது பள்ளிவாசல்களிலும், மத்ரசாக்களிலும் பல நாட்கள் தங்க வைக்கப்பட்டு முஸ்லிம் அமைப்புக்களால் ஆதரிக்கப்பட்டமையை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பல்வேறு தமிழக அரசியல் தலைமைகள் வெகுவாகப் பாராட்டியமை எமது மனித நேயக் கட்சிக்கு கிடைத்த முழு மொத்த தமிழகத்தின் அங்கீகாரமாகக் கருதுகிறோம். எனக் கூறினார்.

மேற்படி நிகழ்வில் அந்- நஹ்லா அரபுக் கல்லூரியின் செயலாளர், ஜம்மியத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ அன்ஸார் மௌலானா (நளீமி) உரையாற்றுகையில்,
இலங்கைக்கு இஸ்லாம் வந்த வரலாற்றைப் பொறுத்த வரை அன்றைய தென்னிந்திய இஸ்லாமியப் பெரியார்கள், மகான்கள், கீர்த்திமிக்க உலமாக்கள் மேற்கொண்ட பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்கின்றோம். வெலிகமையில் ஆரம்ப மத்ரசாவை மத்ரசத்துல் பாரி என்ற பேரில் கி.பி.1884 ல் காயல் பட்டினத்திலிருந்து வருகை தந்த மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ஆரம்பித்து வைத்தமை, 1954ல் அதிராம் பட்டினத்தைச் சேர்ந்த பெரிய ஹஸ்ரத் மர்ஹூம் அபூபக்ர் அத்ரமி  அட்டாளைச்சேனையில் ஷர்கியா அரபுக் கல்லூரியை நிறுவியமை, அவரது மகன் அப்துல்லாஹ் ஹஸ்ரத்1956 ல் காத்தான்குடியில் ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியை நிறுவியமை, ஆரம்ப காலங்களில் வேலூர் பாக்கியதுஸ் சாலிஹாத், ஜமாலியா, தேவ்பந்த் போன்ற பிரபல்யமான தமிழக அரபுக் கல்லூரிகளிலேயே எமது மூத்த ஆலிம்கள் உருவாக்கப்பட்டு இலங்கையில் சன்மார்க்கப் பணி புரிந்தமை என்பன இந்திய - இலங்கை சமய, கலாசார உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பதற்கான ஆதாரமாகும் என்றார். நிகழ்வில் கல்லூரியின் அதிபர் ஏ.அபூஉபைதா(மதனி) முன்னாள் அதிபர் ஏ.எல்.மீராமுகையதீன், கலாநிதி எம்.எல்.முபாறக் (மதனி) உட்பட உலமாக்கள், புத்திஜீவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

http://www.paylot.lk/ 

-ஏ.எல்.எம்.ஷினாஸ்-
கல்முனை கல்வி வலையத்தின் கீழ் உள்ள பிரதேசங்களில் கல்வி நிலையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கல்வி அபிவிருத்திச் சபைகளை உருவாக்கும் பணி தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டமானது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனை கல்வி அபிவிருத்திக் குழு தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸின் வழிகாட்டலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மருதமுனையின் கல்வி அபிவிருத்திச் சபையை ஸ்தாபிப்பதற்கான ஒன்றுகூடல் (04.03.2017) அன்று பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலைய மண்டபத்தில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல், கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எல்.சக்காப் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.

இதில் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகள், பல்கலைக்கழக பதிவாளர்கள், விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், அரசியல் தலைவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், துறைசார்ந்தவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என சுமார் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மருதமுனையின் கல்வி அபிவிருத்தி தொடர்பான சமகால நிலை தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இறுதியில் மருதமுனையின் கல்வி அபிவிருத்திச் சபை ஸ்தாபிக்கப்பட்டது.

இதன் போது பின்வருவோர்  நிருவாக சபைக்கு  தெரிவு செய்யப்பட்டனர். தலைவர்- தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.எம்.இஸ்மயில், செயலாளர்- உதவி விவசாயப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ஹரீஸ்,  பொருளாளர் - இறைவரி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.உவைஸ்,  உதவித் தலைவர் கே.எம்.சுக்ரி, உதவிச் செயலாளர் ஏ.எம்.ஹம்ஸா முகையதீன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். பாடசாலை அதிபர்களையும் இதில் இணைத்துக் கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.


Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget