Halloween Costume ideas 2015
Articles by "Batticaloa"
accdent Accident ACMC Action Addalaichchenai ADJF admission Adventure AIDS Akkaraipattu Akkaraippattu aleppo America ampara Apple aqua Aranayaka articles Australia Award Ball Bangladesh Batticaloa Breaking buddy budget Business Car chennai china CHOGM Cinema closed Colombo Commonwealth Computer Condolence corolla Crazy Mohan Cricket Crime Dawwa death Notice Dengue Download IP Address dubai dx Earth quake East Eclipse English English Local English News Eravur Exam finance Flat Roof flight flood Football France Galle General google habarana Harees Hiace HIV Hobby honda Hongkong House Hudaibiya ICC independence india Indonesia International Days invents Irakkaamam Iran Islam Islamabath Italy Jaffna Janaza Japan jawadh kalasem kalmunai Kandy Karaitivu kariappar Kattankudy ke 72 ke72 Kinniya Kurunegala kuwait labour day Land leisure LH 51 lifi loan lorry Maithripala sirisena maldives Malesia Maligaikadu Malta Mannar Maruthamunai Mawadipalli mayday MC mobile mobile phone Mothers Day mutur My Pet Navithanveli Navy Nepal news plus NewsPlus newzealand Nintavur nissan No-confidence motion Notice OBA Oddamawady OL Oluvil Pakistan Palamunai parliament Permit Pink Poem police Political Pottuvil President prime minister Pulmoddai Puttalam Qatar Racism rent RESPECT road sainthamaruthu sale sale or rent sammanthurai saudi saudi arabia Scholarship school Scotland seusl SLBF Slider SLMC Speed Sports sports local sri lanka srilanka Statement syriya T20 Asia Cup T20 World Cup Taiwan tajikistan Tamil Tamil Actor Profile Tamil Actress Profile Tamil News Tech Thalir toyota Traffic train Trinco Tsunami Turky UN Van Vanni Vehicle video VPN wagon westindies wifi Wilpattu world zahira College

-ஆர். ஹஸன்- 
மட்டக்களப்பு, மஞ்சத்தொடுவாய் வாவியில் மீன்பிடி மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை திருத்துவதற்கான நிலையமொன்றை அமைப்பதற்கு கடற்றொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதற்கான மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
 
இது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து தனக்கு அவசரமாக அனுப்பி வைக்கமாறு மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி மற்றும் நன்னீர் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளருக்கு மீன்பிடி மற்றும் நன்னீர் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 
 
மீன்பிடி மற்றும் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மட்டக்களப்பு பகுதியிலுள்ள மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளை திருத்துவதற்கான நிலையமொன்று இல்லாமையினால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீனவர்களது படகுகள் திருத்துவதற்கோ அல்லது வேறு ஏதேனும் தேவைகள் ஏற்படும் பட்சத்திலோ வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் அல்லது ஒலுவில் துறைமுகத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் விரயம், காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மீனவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.  
 
இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு, பூநொச்சிமுனை மீன்பிடி சங்கம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து, அவர் இது குறித்து கடற்றொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தார். 
 
இந்நிலையில், அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர் அமரவீர உள்ளிட்ட அவரது அமைச்சின் உயர் அதிகாரிகளை மஞ்சத்தொடுவாய் பகுதிக்கு அழைத்துச் சென்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அப்பகுதி மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்தார். 
 
பின்னர், மஞ்சத்தொடுவாய் பகுதியில் மீன்பிடி படகுகளை திருத்துவதற்கான நிலையமொன்றை அமைத்துத் தருவதாக வாக்குறுதி வழங்கிய அமைச்சர் அமரவீர, அதனை நிர்மாணிப்பதற்கான இடத்தையும் பார்வையிட்டார். 
 
இவ்வாறான நிலையில், மீன்பிடி படகுகளை திருத்துவதற்கான நிலையமொன்றினை அமைப்பதற்கு தேவையான மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து தனக்கு அவசரமான அனுப்புமாறு மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி மற்றும் நன்னீர் வள திணைக்கள உதவிப்பணிப்பாளருக்கு மீன்பிடி மற்றும் நன்னீர் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பணிப்புரை வழங்கியுள்ளார். எனவே, நிர்மாணப்பணிகள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

http://www.paylot.lk/
-ஆர்.ஹஸன்-
யுத்தம் மற்றும் இன வன்செயல்களால் சேதமடைந்த மதஸ்தளங்ளுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படுகின்ற நஷ்டஈட்டு வேலைத்திட்டத்துக்கு அமைவாக யுத்தால் பாதிக்கப்பட்ட ஏறாவூர் புலிதலாராமய விகாரைக்கு 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதன் முதற்கட்டமாக 4 இலட்சம் ரூபா நஷ்டஈட்டு தொகைக்கான காசோலை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஏறாவூர் புலிதலாராமய விகாராதிபதி அமன்வல தர்மரத்ன தேரரிடம் கையளிக்கப்பட்டது. 

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி காரியாலயத்தில் வைத்து மேற்படி நிதி கையளிக்கப்பட்டது. இதன்போது, மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 
 
யுத்த காலப் பகுதியில் பெருமளவு பாதிக்கப்பட்ட ஏறாவூர் புலிதலாராமய விகாரை மிகவும் மோசமான நிலையில் இயங்கி வந்தது. இந்நிலையில், இது குறித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்துக்கு ஏறாவூர் புலிதலாராமய விகாராதிபதி அமன்வல தர்மரத்ன தேரர் கொண்டு சென்றிருந்தார். 
 
இதனை அடுத்து விகாரைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த இராஜாங்க அமைச்சர், தனது அமைச்சினால் யுத்தம் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மதஸ்தளங்களுக்கு வழங்கப்படுகின்ற நஷ்டஈட்டு தொகையைப் பெற்றுக்கொடுக்கவும் முன்வந்தார். 
அதற்கமைய குறித்த விகாரைக்கு 10 இலட்சம் ரூபா நஷ்டஈட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்நிதி மூன்று கட்டங்களாக வழங்கி வைக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக 4 இலட்சம் ரூபா தற்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 
 

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு வவுனத்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கரையாக்கன்தீவு கணேஷ் வித்தியாலயம் மற்றும் பாவக்கொடிச் சேனை விநாயகர் வித்தியாலயம் என்பவற்றுக்கு தலா 14 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி  கட்டிடங்கள் அண்மையில் திறந்து வைக்கப்பட்டன.

http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/

http://www.paylot.lk/-எஸ்.எம்.எம். றம்ஸான்-
இலங்கையில் அமுலுக்கு வந்துள்ள தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் விதமாக இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனம் ஒழுங்குசெய்திருந்த ஒருநாள் செயலமர்வு, ஊடகப் பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.அமீர் ஹுசைன் தலைமையில் நேற்று (07) மட்டக்களப்பு நியூ சன்ரைஸ் விடுதியில் இடம்பெற்றது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த 65 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இச்செயலமர்வில், சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் சிரேஸ்ட நிகழ்சிதிட்ட உத்தியோகத்தர் சட்டத்தரணி கே.ஐங்கரன் பிரதான வளவாளராகக் கலந்துகொண்டு தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பான விரிவான விளக்கத்தை வழங்கிவைத்தார்.

http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/

-இன்ஷாப்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்திற்கான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் செயலமர்வு மற்றும் கலந்துரையாடல் இன்று (04) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன், தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, செயளாலர் சுபையிதீன் ஹாஜி, பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப், திணைக்கள தலைவர்களான வீ.சீ. இஸ்மாயில், சிராஸ் மீராசாஹிப், எஸ்.எஸ்.பி. மஜீத், ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.




-ஆர்.ஹஸன்-
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று (26)  ஞாயிற்றுக்கிழமை போராட்ட களத்துக்கு விரைந்தார். 
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகளை கேட்டறிந்த இராஜாங்க அமைச்சர், இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் உறுதியளித்தார். 
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மட்டு. காந்தி சதுக்கத்தில் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்ந்தது. 
இந்நிலையில், அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் நோக்கில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அங்கு சென்றார். 
அத்துடன், தான் கொழும்புக்கு சென்ற பின்னர் அரச உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி இப்பிரச்சினையை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் அங்கு உறுதியளித்தார். 
இராஜாங்க அமைச்சரின் வருகைக்கு பாராட்டுத் தெரிவித்த வேலையற்ற பட்டதாரிகள், தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்தனர். 


-பழுலுல்லாஹ் பர்ஹான்-
நேற்று 24 வெள்ளிக்கிழமை நான்காவது நாளாகவும் மட்டக்களப்பில் சத்தியாக்கிரகப் போராட்டத்தினைத் தொடர்ந்து வரும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவாக மட்டக்களப்பு நகரில் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களான பஸ் நிலையம் ,பொதுச் சந்தை உள்ளிட்ட இடங்களிலும்,சுவரொட்டிகள் ஒட்டும் இடங்களிலும் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் அதிகளவாக ஒட்டப்பட்டிருந்தன.

குறித்த சுவரொட்டிகளில் ......
நல்லாட்சி அரசிற்கு பட்டதாரிகள் என்ன தெருவோர நாய்களா....?
நல்லாட்சி அரசில் ஏன் அதிகரித்தது? வேலையில்லா திண்டாட்டம்,பட்டதாரிகளை படுகுழியில் தள்ளாதே,அரசே வேலையில்லா பட்டம் எதற்கு?,
நல்லாட்சி அரசிற்கு பட்டதாரிகள் என்ன தெருவோர நாய்களா?,
இன்று அதிகாரிகள் அரியனணயில் பட்டதாரிகள் பாதைவழியே,வேலையில்லாத பட்டம் எதற்கு? 
எமது நேரத்தை வீணடிக்காதே, இளைய சமூகமே பட்டம் பெறுவது பற்றி சிந்தி!,
பட்டம் பெற்றது பாதையில் கிடக்கவா?,
அரசியல் வாதி உனக்கு கோட்டா, பட்டதாரி எமக்கு ரோட்டா?
அரசியல்வாதிகள் தூங்குவதற்கே பாராளுமன்றம் பட்டதாரிகள் எமக்கோ பாதையோரம்,
அரச வேலைவாய்ப்பில் பாரபட்சம் ஏன்?,
பொய் வாக்குறுதியால் எம்மை பொல்லாதவர் ஆக்காதே,
அரசே பட்டதாரிகளை முட்டாளாக்காதே,
நலிவடையும் நல்லாட்சி 
பட்டதாரிகள் நாம் தெருவோர கண்காட்சியா,
தகுதிகான் பட்டதாரிகளுக்கு வேலைகொடு 
அரசே,பல்கலைக்கழகத்தில் பட்டம் கொடுப்பது பாதையோரத்தில் படுக்க வைக்கவா? 
போன்ற வசனங்கள் எழுதப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

கடந்த ஐந்து நாட்களாக போராட்டம் நடாத்தி வரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கப் பிரதிநிதிகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இன்று (25) காலை சந்தித்தார். 

இச்சந்திப்பில் NFGGயின் தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் நழீமி அவர்களும் மற்றும் NFGG யின் ஏறாவூர் பிரதேச செயற்குழு உறுப்பினர் MLM.சுஹைல் ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டனர்.

தமக்கான அரசாங்க நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனக்கோரி கடந்த ஐந்து நாட்களாக மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தினர் மட்டக்களப்பு நகரில் தொடர்ச்சியான சத்தியாக்கிரக  கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொள்ளு முகமாகவும், அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குமுகமாகவும் NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் இந்த சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது பட்டதாரிகள் சங்கப் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் NFGGயிடம் முன்வைத்தனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளிலும் பட்டப்படிப்புக்களைப் பூர்த்தி செய்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 4500 பட்டதாரிகள் வேலை வாயப்புக்காக காத்துக் கொண்டிருபப்பதாகவும், கடந்த காலங்களில் பல்வேறு வகையிலான வாக்குறுதிகள் மாகாண மற்றும் மத்திய அரசாங்க பிரதிநிதிகளால் வழங்கப்பட்ட போதிலும் அவையெதுவும் இது வரை நிறைவேற்றப்பட வில்லை யெனவும் தமது விரக்தியினையும் கவலையினையும் அவர்கள் தெரிவித்தனர்.  அத்தோடு விசேடமான தெரிவுப் பரீட்சை நடாத்துகின்ற முறையினைத் தவிர்த்து தமது கல்வி பின்புலத்திற்கேற்ற அரச தொழில் நியமனங்களை இன்னும் தாமதிக்காமல் அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அத்தோடு தமது கோரிக்கையடங்கிய மனு ஒன்றினையும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மானிடம் கையளித்ததோடு தமக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கான உதவிகளை வழங்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்..
"உங்களது பிரச்சினைகளை உணர்வு பூர்வமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், இதற்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நிலவும் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு அறிவு பூர்வமாகவும் விஞ்ஞான ரீதியாகவும் இதனைக் கையாள வேண்டும்.
இது தொடர்பிலான நடவடிக்கையின் முதற்படியாக உங்களது போராட்டத்தினையும், உங்களது கோரிக்கைகளையம் பிரதம மந்திரி, ஜனாதிபதி, ஆளுநர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். அதனைத் தொடர்ந்து உங்களின் கோரிக்கைகளை நியாயப்படுத்தி சாத்தியப்படுத்தக்கூடிய சில புள்ளி விபரங்களை அவசரமாகத் திரட்ட வேண்டும். அதனை நீங்களும் நாங்களுமாகச் சேர்ந்து திரட்டி இந்தப் பட்டதாரிகளை எவ்வாறான ஒரு பொறி முறையின் ஊடாக நியமனங்களுக்கு உள்வாங்க முடியும் என்கின்ற ஒரு முன்மொழிவினை நாம் தயாரித்து சமர்ப்பிப்போம். அது நமது பிரச்சினைகளை இலகு படுத்தி தீர்வுகளை சாத்தியப்படுத்தும்"  எனத் தெரிவித்தார்.

NFGG பிரதிநிதிகள்  வழங்கிய ஆலோசனைகளை ஏற்றுக் கொண்ட அந்தப் பட்டதாரிகள் சங்கப் பிரதிநிதிகள் அவசியமான புள்ளி விபரங்களைத் திரட்டி அடுத்த வார இறுதிக்குள் சமர்ப்பிப்பதாகவும் உறுதியளித்தனர்.
-NFGG ஊடகப் பிரிவு-

 

-எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமாகவுள்ள, கிழக்கில் மாபெரும் சமராக இடம்பெறப்போகும் EAST Speed T20 கிரிக்கட் சுற்றுப்போட்டியில் விளையாடும் அணிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது 

அவை வருமாறு....

GROUP     A 
VALARPIRAI SPORTS CLUB ODDAMAVADI 
REOWN SPORTS CLUB KALMUNAI 
GALLEONS SPORTS CLUB MALIGAIKADU 
FIMA SPORTS CLUB SAINTHAMARUTHU 

GROUP     B
KINNIYA NATIONAL SPORTS CLUB KINNIYA 
AZ ZAMS SPORTS CLUB KALMUNAI 
EASTERN CHALLENGES SPORTS CLUB MALIGAIKADU 
REAL HEROES SPORTS CLUB KALMUNAI 

GROUP     C
YOUNG HEROES SPORTS CLUB ERAVUR 
SEA STAR SPORTS CLUB KALMUNAI 
TOP RANK SPORTS CLUB KALMUNAI 
UHANA SPORTS CLUB AMPARA 

GROUP     D
KNIGHT RIDER SPORTS CLUB KATTANKUDY 
BRAVE LEADERS SPORTS CLUB SAINTHAMARUTHU 
LEGENDS SPORTS CLUB KALMUNAI 
HOLY HEROES SPORTS CLUB SAINTHAMARUTHU 

GROUP     E
SATO SPORTS CLUB ODDAMAVADI 
MUFO SPORTS CLUB SAMMANTHURAI 
VIVEKANANDA SPORTS CLUB KARAITIVU 
KING HORSES SPORTS CLUB SAINTHAMARUTHU 

GROUP     F
WESTERN WORRIOUS SPORTS CLUB MUTUR 
YOUNG BIRDS SPORTS CLUB KALMUNAI 
REAL POWER SPORTS CLUB MALIGAIKADU 
LAMCO SPORTS CLUB SAINTHAMARUTHU 

GROUP     G
REAL FIGHTER SPORTS CLUB THOPPUR 
NEW STAR SPORTS CLUB SAINTHAMARUTHU 
AGE STEEL SPORTS CLUB SAINTHAMARUTHU 
JIMHANA SPORTS CLUB KALMUNAI 

GROUP     H
YOUNG STAR SPORTS CLUB ERAVUR 
IMRAN SPORTS CLUB NINTAVUR 
VICTORIUS SPORTS CLUB KALMUNAI 
TOPAZES SPORTS CLUB KALMUNAI

புனர்வாழ்வு அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சுயதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி, மலிவு விற்பனைக்கான அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ஈட்டுக் கொடுப்பனவுக் காசோலை வழங்கல் என்பன எதிர்வரும் (26) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாநகரசபை  மைதானத்தில் நடைபெறவுள்ளது. 
 
ஞாயிறு காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன், இராஜாங்க அமைச்சரின் செயலாளர் திருமதி.சாந்தி நாவுக்கரசன் கௌரவ அதிதியாகவும், சிறப்பு அதிதயாக மட்டு மாவட்டச் செயலாளரும், அரசாங்க அதிபருமான திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். 


-யூ.கே.காலீத்தீன், எம்.வை.அமீர்-
கிழக்கு மாகாணத்தில் முதல்முறையாக சர்வதேச தரத்திலான ரீ-20  கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றை சாய்ந்தமருது பீமா விளையாட்டு நிறுவனமும் ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

சர்வதேச மற்றும் தலைநகர, விளையாட்டு உபகரணங்கள் வழங்குநர்களான
SPEED Sports Company Ltd, India  Khazana Sports, Colombo ஆகியவற்றின் பிரதான மற்றும் இணை அனுசரணையில் கிழக்கு மாகாணத்தில் முதன்முதலாக இடம்பெறும் ஒரு பிரமாண்ட சுற்றுப் போட்டியாக இது அமையவுள்ளது.

இதனை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பும், போட்டிக் குலுக்கலும் இன்று (19) சாய்ந்தமருது சி பிரீஸ் உணவகத்தில், போட்டியின் பிரதம ஏற்பாட்டாளரான ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் அலியார் பைசர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கொழும்பு கஸானா ஸ்போர்ட்ஸ் அதிபரும் இணை ஏற்பாட்டாளருமான அல் - ஹாஜ் எம். அஸ்கர் அலி கலந்துகொண்டதுடன், அதிதிகளாக ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின்தலைவர் ஏ.ஆதம்பாவா, உபதலைவர் யூ.எல்.அபுல் ஹஸன், விளையாட்டு அதிகாரி எம்.பீ.எம். ராஜாயீ, இக்ரா மொபைல் அதிபர் யூ.எல்.சத்தார். இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான எப்.எம்.தில்சாத், இசட்.எம்.ஸாஜித் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் , இச்சுற்றுப்போட்டியின் முதலாம் பரிசாக ரூ. 100,0000.00 உம்  வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படவுள்ளதுடன், இரண்டாம் பரிசு ரூ. 50,000.00, சுற்றுப்போட்டி நாயகனுக்கு ரூ. 22,000.00 பெறுமதியான துடுப்பு மட்டை, சிறந்த துடுப்பாட்ட வீரர்,  பந்துவீச்சாளர், களத்தடுப்பாளர் , விக்கற் காப்பாளர் ஆகியோருக்கு தலா ரூ. 5000.00 பெறுமதியான காலணிகள் வழங்கப்பட உள்ளதுடன், இவர்களுக்கு இந்திய சுற்றுலாவுக்கான வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது மட்டுமல்லாது, அவர்களுக்கு இலங்கை இராணுவ அணியில் விளையாடுவதற்கான சந்தர்ப்பங்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

அதேபோல் இச்சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்டம் சார்பாக 20 அணிகளும், மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக 8 அணிகளும், திருகோணமலை மாவட்டம் சார்பாக 4 அணிகளுமாக மொத்தம் 32 அணிகள் களமிறங்கவுள்ளன.

பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இச்சுற்றுப்போட்டியானது ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதிவரை அனைத்துப்போட்டிகளும் சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget