சித்திரைப்
புதுவருடத்தையொட்டி பாடசாலைகளுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் புரிந்துணர்வையும்
ஏற்படுத்தும் வகையில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலய
அதிபர் ,பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் ” நல்லிணக்க கலை கலாசார
விளையாட்டு ” நிகழ்வுகள் பாடசாலையில் இடம்பெற்றன.
பாடசாலை அதிபர்
திரு.பே.காப்தீபன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக
சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி. சு.வரதராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாடசாலை பிரதி அதிபர்களான செ.செந்தில்குமார் , திருமதி.சு.சுரேஸ் குமார் , பொறுப்பாசிரியை
திருமதி.வ.புவனேந்திரராஜா , பட்டிருப்பு தேசிய
பாடசாலை , களுவாஞ்சிகுடி சிரேஸ்ட ஆசிரியர் எம்.குமாரசிங்கம் ஆகியோர் அதிதிகளாக கலந்து
கொண்டனர்
மங்கள விளக்கேற்றலுடன்
ஆரம்பமான மேற்படி நிகழ்வில் நல்லிணக்கம் சம்பந்தமாக பலவிதமான விளங்கங்கள் வழங்கப்பட்டன.
பாடசாலை மாணவர்கள்
,ஆசிரியர்கள் , அதிதிகள் மத்தியில் சித்திரைப் புதுவருட பாரம்பரிய உணவு பண்டங்கள் பரிமாறப்பட்டன.
இதனைத் தொடர்ந்து
மாணவர்களின் கலை நிகழ்வுடன் களுதாவளை மகா வித்தியாலய ஆசிரியர் அணியினருக்கும் பட்டிருப்பு
தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி ஆசிரியர் அணியினருக்குமிடையில் 8 பேர் கொண்ட 6 ஓவர்கள்
மென்பந்து நட்புறவு கிறிக்கட் போட்டியொன்றும் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.










Post a Comment