-ஹாசிப் யாஸீன்-விளையாட்டுத்துறை அமைச்சின் ஓராண்டு முன்னேற்றம்இ தொலைநோக்கு தொடர்பான மீளாய்வு மற்றும் விளையாட்டு வீரர்கள்இ பயிற்றுவிப்பாளர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிழக்வு இன்று (07) புதன்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தலைவருமான திலங்க சுமதிபால உள்ளிட்ட
விளையாட்டு ஆர்வலர்கள், வீர, வீராங்கனைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சின் புதிய கேட்போர் கூடத்தை 'டன்கன் வைட்' கேட்போர் கூடம் என ஜனாதிபதியினால் பெயர் சூட்டப்பட்டது.
நாட்டின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்கும், விளையாட்டின் மூலம் நாட்டுக்கு தேசிய, சர்வதேச ரீதியில் புகழ் தேடித்தந்த வீரர்களுக்கும் பணப் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
விளையாட்டுத்துறை பற்றி எழுதப்பட்ட பல நூல்கள் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன் அசோக குணதிலக எழுதிய 'விளையாட்டு நிர்வாகமும் விளையாட்டின் எதிர்கால செல்வழி' மற்றும் லலித் குணவர்தன எழுதிய 'டன்கன் வைட்' ஆகிய நூல்களும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.



Post a Comment