
-எம்.ஐ,எம். அஸ்ஹர்-
சுகாதார அமைச்சு
கல்வியமைச்சுடன் இணைந்து பல் சுகாதாரத்தை பாடசாலை
மட்டத்தில் மேம்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள பாடசாலைகளில் எழுந்தமான முறையில் குறிப்பிட்ட
வயதெல்லையில் மாணவர்களினதும் பாடசாலை சூழலிலுள்ளவர்களினதும்
பற்சுகாதாரம் சம்பந்தமான ஒரு கணக்கெடுப்பு செயல் திட்டம் ஒன்றினை இம்மாதம் 6 ஆம் திகதி
முதல் 9 ஆம் திகதி வரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
இதனடிப்படையில்
கல்முனை
சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட கல்முனை ஸாஹிரா
தேசியக்கல்லூரி மாணவர்களின் பற்சுகாதார கணக்கெடுப்பு பற்சுகாதார
பொறுப்பதிகாரி டாக்டர் கே.எம்.லத்தீப் தலைமையில் இன்று கல்முனை ஸாஹிரா
தேசியக்கல்லூரி பற்சிகிச்சை நிலையத்தில் இடம்பெற்றது.




Post a Comment