Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | கல்முனை வெளிவாரி கற்கை நிறுவனத்தின் ஆண்டு நிறைவு விழாவும், பட்டதாரிகள் கௌரவிப்பும்!

-ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைடீன், எம்.எம்.ஜபீர்-
பேராதனை பல்கலைக்கழக வெளிவாரி பட்டதாரி மாணவர்களின் 20வது பட்டம் பெறுவோர் கௌரவிப்பு விழாவும் கல்முனை வெளிவாரி பட்டப்படிப்பு கற்கை நிறுவனத்தின் 23வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வும் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார்.

இதில் கல்முனை வெளிவாரி கற்கை நிறுவனத்தின் தலைவர் மௌலவி இஸட்.எம்.நதீர், கல்முனை வெளிவாரி கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ஐ.எம்.பரீட், மெஸ்றோ அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நசீல், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான நௌபர் ஏ.பாவா, ஏ.எம்.றினோஸ் உள்ளிட்ட விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், பட்டதாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பட்டம் பெற்ற பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த விரிவுரையாளர் ஆகியோர் அதிதிகளால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன் விசேட அம்சமாக கல்முனை வெளிவாரி கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினர் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் சேவையினை பாராட்டி பொன்னாடை போர்த்திஇ நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget