அக்கறைப்பற்று அபுவக்கர் சித்திக் இஸ்லாமியக் கல்லூரியின்
முதலாவது பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை (15) கல்லூரியின் அதிபர் அஷ் ஷெய்க்
எம்.எம்.கலாமுல்லாஹ் ரஸாதி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், அகில இலங்கை
ஜம்ய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ் ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி மற்றும்
வெலிகம பாரி அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ் ஷெய்க் அல்- ஹாபில் ஏ.ஆர்.
அப்துல் ரஹ்மான் மல்ஹரி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு
சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கிவைத்தனர்.
மேற்படி நிகழ்வில் கொழும்பு ரஷாத் அரபுக் கல்லூரியின் உதவி
அதிபர் அஷ் ஷெய்க் எஸ்.எச். அப்துல் ஹசன் மதானி, அகில இலங்கை ஜம்ய்யத்துல்
உலமாவின் அக்கறைப்பற்று கிளையின் தலைவர் அஷ் ஷெய்க் எம்.எம். அப்துல்
லத்திப் வஹ்ஜி, மாவடிப்பள்ளி ஷஹ்தி அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ் ஷெய்க்
யூ.எல். முபாரக், அக்கறைப்பற்று உம்மு தர்தா மகளிர் அரபுக் கல்லூரியின்
அதிபர் அப்துல் ஹமீத் அஹ்சனி உட்பட உலமாக்களும், அதிதிகளும் கலந்து
கொண்டனர்.






Post a Comment