Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | வெள்ளிவிழாக்கண்ட "அதிபர்மணி" பஷீருக்கு கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியின் அதியுயர் கௌரவம்!

-எம்.வை.அமீர், எம்.ஐ.எம்.அஸ்ஹர், எஸ்.எம்.எம்.றம்ஸான், யூ.கே.காலித்தீன்-
கடந்த 26 வருடங்களாக கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியில் அதிபராக இருந்து மிகச்சிறந்த கல்விச்சேவையாற்றிய முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ.பஷீரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 2016-10-30 ஆம் திகதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு நிகழ்வு தொடர்பாக பத்திரிகையாளர்களை தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (09) ஆம் திகதி கல்லுரியின் அதிபர் திருமதி எஸ்.ஏ.லியாக்கத் அலி தலைமையில், கல்லுரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது விழாக்குழுவின் பிரதித் தலைவரும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபரும் சட்டத்தரணியுமான எம்.சி.ஆதம்பாவா கலந்துகொண்டு விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

அத்துடன் 2016-10-30 ஆம் திகதி பாடசாலை வளாகம், முழு விழாக்கோலம் பூண்டிருக்குமென்றும், நிகழ்வுக்கு அரசியல் தலைமைகள், உயர்மட்ட  அதிகாரிகள், மதப்பெரியார்கள், பழைய மாணவிகள் மற்றும் பிரமுகர்கள் என 1500 க்கு மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் நிகழ்வில் முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ.பஷீரின் சேவைநலன் தொடர்பான மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது பாடசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் எம்.ஐ.பாஸி, விழாக்குழுவின் பொருளாளர் ஏ.பாறுக், பாடசாலை அபிவிருத்திக்குழுவின் உறுப்பினர்களான றிப்கா அன்சார், ஏ.எச்.நதீரா, ஐ.எல்.ஏ.அஸீஸ், விழாக்குழுவின் ஊடகப்பொறுப்பாளர் நளீம் லத்தீப் ஆகியோரும் பிரசன்னமாகி விழா தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.



 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget