Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

SPORTS | கல்முனையில் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாண அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட சமர்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி நேற்று (09) கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

கல்முனை சந்தாங்கேணி மைதான அபிவிருத்தித் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நேற்று விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். இதனை சிறப்பிக்கும் விதமாகவே இக்கண்காட்சி போட்டி இடம்பெற்றது.

இப்போட்டியில் வடக்குமாகாண அணி 2-0 என்ற அடிப்படையில் கிழக்கு மாகாண அணியை வெற்றிகொண்டு வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

இதன்போது கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களின் கராத்தே நிகழ்வும், கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மாணவிகளின் நடன நிகழ்வும் இடம்பெற்றது
-படங்கள்: எம்.வை.அமீர், எஸ்.எம்.எம்.றம்ஸான்-

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget