சாய்ந்தமருது விதாதா வள நிலையம் இன்று (04.04.2016) திறந்து
வைக்கப்பட்டது.
விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின்
"கிராமத்திற்கு தொழில்நுட்பம்" எனும் தொனிப்பொருளின் கீழ்
நிர்மாணிக்கப்பட்டு, விஞ்ஞான, தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சர் கெளரவ
சுசில் பிரேம்ஜயந் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலிம் தலைமையில்
நடைபெற்ற நிகழ்வுக்கு, ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயாகமகே, விளையாட்டுத்துறை
பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப்
சம்சுடீன், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எம்.அப்துல் மஜிட். மற்றும்
பிரமுகர்களும் கலந்து கொண்டதோடு,
விதாதா வள நிலைய தொழில்நுட்ப மாற்றீடு
பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட பயனாளிகளினால் உற்பத்தி
செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க கண்டு பிடிப்புக்கள்
ஆகியனவும் அதிதிகளினால் பார்வையிடப்பட்டன.




Post a Comment