நடந்து முடிந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலினூடாக
ஒட்டுமொத்த மாவடிப்பள்ளி மக்களின் அங்கீகாரம் பெற்ற அரசியல் பிரதிநிதியாக அகில
இலங்கை மக்கள் காங்கிரஸினூடாக அதிகப்படியான வாக்குகளைப்பெற்று தெரிவு
செய்யப்பட்டுள்ள எம்.ஜலீலை மாவடிப்பள்ளி மண்ணும் மக்களும் பாராட்டுகின்றனர்.
குறுகிய கால இடைவேளைக்குள் தீவிர அரசியல்
பயணத்தை ஆரம்பித்த ஜலீல், எதிர்க்கட்சியினரின் பாரிய எதிர்ப்புப்
பிரச்சாரங்களையும் தாண்டி வெற்றியடைந்திருப்பது கடந்த காலங்களில் மாவடிப்பள்ளி
மக்களின் அபிலாஷைகளை அப்போது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை
என்பதை பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளது.
மாற்றங்களை மக்கள் விரும்பும் இந்த
சந்தர்ப்பத்தில் உரிமைகளை பேச்சளவில் மட்டும் பேசிக்கொண்டிருக்கும் தலைவர்களுக்கு
நேர் எதிரான தலைவரான அமைச்சர் றிஷாட் பதியூதீனுடைய தலைமைத்துவத்தின் கீழ்,
காரைதீவு பிரதேசசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜலீல், மாவடிப்பள்ளி மக்களின் பிரதான தேவைகளை பிரதேசசபையின்
ஊடாகவும் அமைச்சர் றிஷாட் பதியூதீனூடாக நிறைவேற்ற முன்வரவேண்டும் என்று
மாவடிப்பள்ளி சமூகம் எதிர்பார்க்கின்றது.
தேர்தல் காலங்களின் பல்வேறு எதிர் கோஷங்கள்
முன்வைக்கப்பட்டபோதிலும் மாவடிப்பள்ளி மக்கள் நேர்மையின் பால் வாக்களித்ததினூடாக
மாற்றத்துக்கு வாக்களித்து மாவடிப்பள்ளி மண் வெற்றியடைந்துள்ளது என்றே
கூறப்படுகின்றது
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளம் உறுப்பினர்
ஜலீலுக்கு மாவடிப்பள்ளி மக்கள் வழங்கிய வரவேற்பு நிகழ்வின்போது ...........



Post a Comment