-ஏ.பி.எம்.அஸ்ஹர்-தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் முயற்சியில் கல்முனை பிரதேச வறிய குடும்பங்களுக்கு 2ம் கட்ட சீமெந்து பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (07) கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்..ஹரிஸின் இணைப்புச் செயலாளர் ஏ.எம்.ரினோஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை முகாமையாளர் ஏ.எம்.இப்ராஹிம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே..இராஜதுறை,கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.பஸால் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.


Post a Comment