சுனாமி
பேரனர்த்தங்களின் விளைவுகளில் ஒன்றாக - கம்பீரமாய் காட்சியளித்த மருதூரின் தாமரை விளையாட்டு மைதானம் பறி போனதை யாரும் மறுக்க முடியாது. தேசிய ரீதியில் பங்குபற்றி சாதனை படைத்த வீரர்கள் நிறைந்து காணப்படும் மருதூரினிலே 15 வருடங்களாகியும் எந்த ஓர் அரசியல்வாதியும் ஒரு மைதானத்தை அமைத்து தராதது மிகுந்த ஏமாற்றமே!
தற்போது
சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமைந்து காணப்படும் மைதானம் சுற்றுமதில் இல்லாததன் காரணமாக - மழைகாலத்தில் வாகனங்கள் மற்றும் கால்நடைகளின் நடமாட்டம் காரணமாக பழுதடைந்து காணப்படுவதாலும்,
மைதானத்தில்
மின்சாரவசதியில்லாமல்
இருளடைந்து காணப்படுவதால் சில இளைஞர்கள் போதைவஸ்து பாவிக்கும் கூடமாக மைதான அரங்கை பாவிப்பதாலும், விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த சிரமமாக இருப்பதனால் அனைத்து விளையாட்டுக்கழகங்களும் ஒன்றிணைந்து இப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றினை மிகஅவசரமாக வழங்குமாறு கல்முனை ஆணையாளரிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர்...
இதன்போது,
உடனடித்தேவையாக நீர், மின்சார இணைப்பு மற்றும் காவலாளி ஒருவரை நியமிக்கும் படியும் மைதான அரங்கில் சட்டவிரோத நடவடிக்கையில்
ஈடுபடுவோரை
போலீசார் கைது செய்ய ஆவண செய்தும்,
மைதானத்துக்கு
தற்காலிக சுற்றுமதில் அமைக்க கழகங்களின் ஒத்துழைப்போடு பங்களிக்க முடியுமென்றும் ஆணையாளர் வாக்குறுதி வழங்கினார்.
Post a Comment