-ஹாசிப் யாஸீன்-உதிரம் கொடுப்போம் - உயிர் கார்ப்போம் எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு நேற்று புதன்கிழமை (25) சாய்ந்தமருது பிரதேச செலய மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இவ் இரத்ததான நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்தியர் நுஸ்ரத், உதவி பிரதேச செயலாளர் எம்.றிகாஸ் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியின் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இவ் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment