25000 யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கும் திட்டத்தின் அடிப்படையில் காரைதீவு பிரதேச செயலகத்திற்கு 8 வீடுகள் நிர்மானிக்கும் நோக்கில் ஐந்து வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா ஏற்கனவே இடம்பெற்ற நிலையில் மிகுதி மூன்று வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (22) இடம்பெற்றது. இந்நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்
போது பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு. ஸ்ரீரங்கன் அவர்களும் மற்றும் பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பங்குபற்றினார்கள்.
Post a Comment