-எம்.வை.அமீர்-
கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி கடற்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என கட்டப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை, இன்னும் ஒரு
மாதத்துக்குள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
சாய்ந்தமருது கடலின் அடிப்பரப்பில் தேங்கியுள்ள சுனாமியினால் கொண்டுசெல்லப்பட்ட ‘கல்’
போன்ற எச்சங்களை துப்பரவு செய்யும் வேலைத் திடடத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த அம்பாறை
மாவடடத்திற்கான இப்தார் நிகழ்வும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்
தலைவரும் அரச வர்தக கூட்டுத்தாபானத்தின்
தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா. குழுத்தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நேற்று (24) அங்குராப்பன நிகழ்வு சாய்ந்தமருது கடற்கரையிலும், இப்தார்
நிகழ்வு சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலய முற்றத்திலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக
கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் றிஷாத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment