Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | கல்முனை ஸாஹிரா மாணவன் ஸர்ஹானுக்கு "டயலொக்" புலமைப்பரிசில்!

-எம்.ஐ.எம்.அஸ்ஹர்- 
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் எம்.எப்.ஸர்ஹான் டயலொக் நிறுவனத்தால் அமுல் படுத்தப்படுகின்ற ” டயலொக் திறமைப் புலமைப் பரிசில் ” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் முதனிலை மாணவனாக தெரிவு செய்யப்பட்டதால் இப் புலமைப் பரிசில் பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டார்.

இவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை ( 23 ) இசுறுபாய பத்தரமுல்லையிலுள்ள கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது கல்வியமைச்சர் கெளரவ. அகிலவிராஜ் காரியவசமிடமிருந்து தனக்குரிய சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். 

இந்நிகழ்வில் கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராய்ச்சி  கல்வியமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.இவரது உயர்கல்வியினைத் தொடர்வதற்கென இவருக்கான புலமைப்பரிசில் நிதி இவரது மக்கள் கணக்கில் வைப்பிலப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தொலைத் தொடர்புக் கல்வி மற்றும் பொறியியல் கணிதத் துறையில் சந்தர்ப்பத்தினை அதிகரிப்பதற்காக மாணவர் சமூகத்தில் அத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களை இனங்கண்டு அவர்களின் இயலுமைகளை மேலும் வளர்ப்பதன் மூலம் அவர்களையும் நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்குதாரர்களாக மாற்றும் நோக்கில் கல்வியமைச்சும் டயலொக் ஆசியாட்டா நிறுவனமும்  இணைந்து இத்திட்டத்தினை நாடுதளுவிய ரீதியில் அமுல்படுத்திவருகின்றது. இத்திட்டத்தின் கீழ் தேசிய ரீதியில் 30 மாணவர்கள் இப்புலமைப் பரிசில் பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டனர்.
இவர் இக்கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஏ.எல்.எம்.பாறூக்  மற்றும் சானாஸ் பேகம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வராகும்.


இம்மாணவனுக்கு கல்லூரி அதிபர் , பிரதி அதிபர்கள் ,உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,கல்விசாரா உத்தியோஸ்தர்கள்  ,பழைய மாணவர் சங்கம்  ,பாடசாலை அபிவிருத்தி சபை என்பன வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget