களுவாஞ்சிக்குடி
பட்டிருப்பு தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகிய
நிலையில் இன்று ( 20 ) மரதன் ஓட்டப் போட்டிகள் ஆரம்பமாகின.
பாடசாலை அதிபர்
கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில் பாடசாலை பிரதி
அதிபர்களான என்.நாகேந்திரன் ,எம்.சுவேந்திரராஜா, ரீ.ஜனேந்திரராஜா விளையாட்டுக் குழு
உறுப்பினர்கள் ,ஆசிரியர்கள்,
மாணவர்கள் ,கல்விசாரா உத்தியோஸ்தர்கள் ,பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் ,களுவாஞ்சிக்குடி வீதிப் போக்குவரத்து
பொலிஸார் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை
வைத்தியர்கள் உத்தியோஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
விபுலானந்தர் (
சிவப்பு ) ,விவேகானந்தர் (
பச்சை ), இராமகிருஷ்ணர் (
நீலம் ) ,நாவலர் ( மஞ்சள்)
ஆகிய இல்லங்களுக்கிடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறும் இவ் இல்ல விளையாட்டுப் போட்டியின்
இறுதி நாள் நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எம்.உதயகுமார்
பிரதம அதிதியாகவும் பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் ,மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர்
திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் ,பட்டிருப்பு வலய உடற்கல்வித்துறை உதவிக்
கல்விப் பணிப்பாளர் திரு . பீ. இதயகுமார் ,களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி
டாக்டர் கு.சுகுணன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டு
சிறப்பிக்கவுள்ளனர்








Post a Comment