மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதுடன் மின்கம்பத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக சிறியரக டிப்பர்வாகனம் மின்கம்பத்துடன் மோதுண்டதில் வாகனத்தில் பயணித்த இருவரும் பலத்த காயத்திற்குள்ளாகிய நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலையிலிருந்து கல்முனையை நோக்கி பயணித்த இந்த டிப்பர் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே மின்கம்பத்துடன் மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் பயணித்த திருகோணமலையைச் சேரந்த அயர்தீன் தாபித் (27 ) , றபீக் சியாம் ( 30 ) ஆகியோரே இவ்விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களாவர்.
இவ்விபத்து சம்பந்தமாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment