Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | சுண்டங்காய் காப்பணம், சுமைகூலி முக்காப்பணம் போன்றதே 2017 பட்ஜட் - சுனில் எம்.பி (வீடியோ)

தற்போதைய அரசு சமர்ப்பித்துள்ள வரவுசெலவுத்திட்டமானது "சுண்டங்காய் காப்பணம், சுமைகூலி முக்காப்பணம் போன்றதே" எனும் பொருள்பட மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் "கோப்" குழுவின் தலைவருமான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

அன்மையில் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவரின் உரை கீழே வீடியோ காட்சியாகத்தரப்படுகின்றது.

சிங்கள மொழியிலுள்ள அவரது உரையின் தமிழாக்கம்...

தற்போது அன்றாட வருமானத்துக்கும் வழியில்லாமலுள்ளது இந்த அரசாங்கத்துக்கு, 
இப்படியே போனால் அடுத்த வரவுசெலவுத்திட்டத்தில் கொண்டுவருவார்கள் மக்கள் பன்சலைக்கு போனால் அவர்களுக்கு நன்மை கிடைக்கிறது ஆகையால் அதற்க்காகவேண்டி அரசுக்கு ஒரு தொகை செலுத்த வேண்டும் பன்சல், பள்ளி, கோயிலுக்கு போனாலும் வரி செலுத்த வேண்டும் என்று கொண்டுவருவார்கள். 

ஆச்சரியம் அது இம்முறை வராமல் போனது ...

தேசிய மேம்படுத்தல் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அவர்கள் வரவுசெலவுத்திட்டம் வாசிக்கும்போது அனைவரும் தூக்கம், 

தூங்கி வழிந்துவிட்டு வாக்கெடுப்பில் கை உயர்த்துவது. 

பாராளுமன்றம் என்பது தேசிய தூங்கும் மத்திய நிலையமாக மாறியுள்ளது. அதுதான் உண்மை. தூங்கி வழிந்துவிட்டு வாக்கெடுப்பு நேரத்தில் மட்டும் ஹாய் எனக் கை  உயர்த்துவது. 

தண்டம், வரி அனைத்துக்கும் ஹாய்தான். பாருங்கள் அழகிய முறையில் எல்லாம் போடப்பட்டுள்ளது. இது அனைத்தையும் சுருட்டுவது  ஒருசாரார்தான், சுருட்டியதை மறைக்க போட்டிருக்கிறார்கள் நெத்தலிக்கருவாடு கிலோ ஒன்று 5 ரூபாயால் விலைக்குறைப்பு. 

இவ்விடத்தில் உள்ள யாராவது ஒருவர் கையுயர்த்திக் கூறுங்கள் வீட்டுக்கு செல்லும்போது 1 கிலோ நெத்தலிக்கருவாடுவாங்கிச்செல்பவர் யாராவது உண்டா என்று. ஹோட்டல் முதலாளி கூட கொண்டுசெல்லமாட்டார். 

வேண்டுமென்றால் கிராம் 100 அல்லது 200 அளவே வாங்கிச் செல்வார்கள். நெத்தலிக்கருவாடு கிலோவுக்கு 5 ரூபாய் குறைந்தால் 100 கிராமுக்கு 50 சதம். ஆனால் குறைந்த பட்ச தண்டப்பணம் 2,500 ரூபாய் . 

நெத்தலிக்கருவாடு வாங்க கடைக்குப்போய் வரும் வழியில் கோடு பாய்ந்தால் கிளிஞ்சிபோச்சி.....

ஆனபடியால் இந்த வரவுசெலவு திட்டமே நல்ல உதாரணம் இந்த அரசு மக்களின் அரசு அல்ல என்பதற்கு.

 வீடியோ 
 http://www.tv.kalasem.com/2016/11/sunil-hanthuneththi-mp-speech-regarding.html

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget