கல்முனை மாநகரசபையின்
சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் மேற்கொண்ட பாரிய முயற்சியினால் சாய்ந்தமருது
தோணா பிரதேசத்தின் இரு புறங்களிலுமுள்ள குடியிருப்பு பகுதியில் பரவவிருந்த பெரு வெள்ளம்
தடுக்கப்பட்டது.
தற்போது அம்பாறை
மாவட்டத்தின் பல இடங்களிலும் பரவலாக பெய்துவரும் அடை மழையினால் சாய்ந்தமருதினூடாக ஊடறுத்துச்
செல்லும் தோணாவின் நீர் மட்டம் உயர்ந்திருந்தததுடன் குடியிருப்புகளுக்குள்ளும் வீதிகளிலும்
வெள்ளநீர் பரவும் அபாயம் தோன்றியிருந்தது. இந்த தோணா தற்போது பிஸ்ரியா மற்றும் ஐக்கோணியா
வகை நீர்க்களைகளினால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதனால் நீர் வடிந்தோடுவதில் பல சிக்கல்
நிலமை தோன்றியிருந்தது. இதனை கருத்திற் கொண்ட கல்முனை மாநகரசபையின் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு
உறுப்பினர்கள் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மற்றும் ஆணையாளர் எம்.சீ.அன்சார் ஆகியோருக்கு விடுத்த
வேண்டுகோளையடுத்து அவ்விருவரும் ஸ்தலத்திற்கு
வருகை தந்து நிலமைகளை நேரில் அவதானித்து தோணாவில் நிரம்பி காணப்பட்ட வெள்ளநீர் முகத்துவாரம்
தோண்டப்பட்டு கடலுக்கு அனுப்பப்பட்டது.
Post a Comment