Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

ஞானசார தேரர் கைது! பெப்-09 வரை விளக்க மறியல்!


பொதுபல ​சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.




ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற
வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத்
எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர்
கைதாகியுள்ளார்.




சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும்
வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம்
தெரியப்படுத்தப்பட்டது.




இதன்படி ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம
பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகருக்கு, நீதவானால் உத்தரவிடப்பட்டது.




இந்நிலையில் இவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப் பட்டதையடுத்து அவரை பெப்ரவரி-09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.







Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget