இஸ்ரேலைச் சேர்ந்த Nua Robotics எனும் நிறுவனம் ஸ்மார்ட் சூட்கேஸை உருவாக்கியிருக்கின்றது.
இந்த நவீன சூட்கேஸில் கெமரா சென்சார்கள் மூலம் சமதளத் தரைகளில் தானாகப் பின்தொடரும் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.
இதனால், சூட்கேஸைப் பின்தொடர விட்டுவிட்டு நீங்கள் நடந்து செல்ல முடியும். அத்துடன், யாரேனும் உங்கள் சூட்கேஸை எடுக்க முயன்றால் அலாரம் மூலம் சூட்கேஸ் உங்களுக்கு சமிக்ஞை கொடுக்கும்.
சென்சார் நெட்வொர்க், கம்ப்யூட்டர் விஷன், ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் மூன்றையும் இணைத்து இந்த சூட்கேஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனில் இதற்கான அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொண்டு, Follow Me என்ற பட்டனை அழுத்தினால், சூட்கேஸ் இயங்க ஆரம்பித்துவிடும்.
இன்னும் சிலவற்றை மேம்படுத்த வேண்டியிருப்பதால் இந்த சூட்கேஸ் சில மாதங்கள் தாமதித்தே சந்தைக்கு வரும் என Nua Robotics நிறுவனம் அறிவித்துள்ளது.

Post a Comment