சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் கல்வி
பயிலும் குறைந்த வருமானங்களை உடைய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அப்பாடசாலையின்
அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் இன்று (01) இடம்பெற்றது.
சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில்
கல்வி பயிலும் மாணவர்களில் குறைந்த வருமானங்களை உடைய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, கற்றல் உபகரணங்களை
சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி தபால்நிலைய அதிபர் எம்.எம்.ஏ.முபாறக் மற்றும் கிராம
சேவை உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.இர்பான் ஆகியோர் அன்பளிப்புச் செய்திருந்தனர்.
கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும்
நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அதிபர் எம்.எஸ்.நபார், கல்விக்கு உதவுவது என்பது
மிக உயர்ந்த பண்பு என்றும், குறிப்பட்ட கால எல்லைக்குள் வேகமாக வளர்ச்சியடைந்து
வரும் அல் ஜலால் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கு உயர் மனம் கொண்ட சகோதரர்கள்
உதவுதன் ஊடாக, தங்களது கற்றல் செயற்பாடுகளில் மாணவர்கள் மேலும் உந்தப்பட்டு மாணவர்களும் இப்பிராந்தியமும்
சிறப்படையும் என்றும் தெரிவித்தார்.
பாடசாலையின் காலைக்கூட்ட வேளையில்
இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த 2004
ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி கடற்பேரலையின் காரணமாக இப்பாடசாலையும் அதனைச் சூழவுள்ள
பிரதேசமும் கணிசமான அளவு பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment