-எம்.ஐ.எம். அஸ்ஹர்- கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியினை முன்னிட்டு பழைய மாணவர்களின் பங்களிப்பினை வலுவுட்டும் வகையில் இன்று கல்லூரி மைதானத்தில் கிறிக்கட் கண்காட்சிப் போட்டிகள் இடம்பெற்றன.
பழைய மாணவர்களை உள்ளடக்கிய ஸஹிரியன் அணியினை முதல் போட்டியில் கல்லூரி ஆசிரியர் அணி வெற்றி கொண்டது.
இரண்டாவது போட்டியில் கல்லூரி ஆசிரியர் அணியை பழைய மாணவர் சம்மேளன அணி வெற்றி கொண்டது.
கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளுக்கு கல்லூரியின் பழைய மாணவரும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள பொறியியலாளர் ஏ.எல்.எம்.பாறூக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.











Post a Comment