ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் 10 இலட்சம் தேங்காய்களை உடைத்து பொலிஸ் நிதிக்குற்றத்தடுப்பு பிரிவுக்கு எதிராக தமது எதிர்ப்பினை நாளை
வெளிகாட்டவுள்ளனர்.
பொலிஸ் நிதிக் குற்றத்தடுப்புப் பிரிவின் ஓராண்டு பூர்த்தி நாளை
கொண்டாடவுள்ள நிலையில், ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் நாளை மீட்டியாகொட, சீனிகம
நகரில் 10 இலட்சம் தேங்காய் உடைத்து எதிர்ப்பினை வெளிகாட்டவுள்ளதாக
தெரிவித்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தின் அநீதிகளுக்கு எதிராகவும், தற்போதைய அரசு
முன்னெடுத்து வரும் செயல்பாடுகளுக்கான தீர்வினை கடவுளாவது பெற்றுக்கொடுக்க
வேண்டும் எனத் தெரிவித்தே, தேங்காய்கள் உடைக்கவிருப்பதாக ஒன்றிணைந்த
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment