Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

காத்தான்குடியில் பொலிசாரின் முன்மாதிரி



-பழுலுல்லாஹ் பர்ஹான்-


இலங்கை
திருநாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பொலிஸ் நிலைய
மக்கள் தொடர்பாடல் பிரிவும், காத்தான்குடி சீடோ சமூக சேவை அமைப்பும்
இணைந்து புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடியை சிரமதானம்
செய்யும் நிகழ்வு 04-02-2016 நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.





இதன்
போது காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பிரதிநிதிகள்
உட்பட சீடோ சமூக சேவை அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரினால் புதிய
காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடி சிரமதானம் மூலம் துப்பரவு
செய்யப்பட்டது.





மேற்படி சிரமதான நிகழ்வில்
காத்தான்குடி பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.
செல்வராஜா, சிவில் பாதுகாப்பு பிரிவு அதிகாரி எம். மயூரன், உட்பட பொலிஸ்
பொறுப்பதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சீடோ அமைப்பின் தலைவர் ஏ.பீ.எம்.
ஜௌபர் ஜே.பி, பிரதேச செயலக உத்தியோகத்தர் ஏ.பி. நபீல் ஆகியோரும் மஹல்லா
வாசிகள், பொது மக்கள், பொது அமைப்புக்களின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து
கொண்டனர்.


 




Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget