Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கேட்டா அப்பிடியே ஷாக்காகிடிவீங்க!


பிரதமர்
அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்ட சொத்து மதிப்பில், பிரதமரின் அசையாச்
சொத்துக்களின் மதிப்பு கடந்த 13 ஆண்டுகளில் 25 மடங்கு
அதிகரித்துள்ளதையடுத்து அவரின் சொத்து மதிப்பு, ரூ.1,26,12,288 லிருந்து
ரூ.1,41,14,893 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், பிரதமர் வசம் அதிகளவு
பணம் கையிருப்பு இல்லை. பிரதமர் கைவசம் ரூ.4,700 வைத்துள்ளார். கடந்த
2014ம் ஆண்டு ஆகஸ்ட் 18ல் வெளியிடப்பட்ட கையிருப்பு தொகையான ரூ.38,700
என்பது தற்போது ரூ.4,700 ஆக குறைந்துள்ளது. இதேகாலக்கட்டத்தில், 2015
மார்ச் மாதம், பிரதமரின் அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு
ரூ.1,26,12,288 லிருந்து ரூ.1,41,14,893 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த
2014ம் ஆண்டு மே 26ம் தேதி பிரதமராக பதவியேற்ற மோடி வசம், இருசக்கர
வாகனங்கள், விமானம், படகு எதுவும் இல்லை. அவரது வங்கிக்கணக்கு குஜராத்தில்
உள்ள வங்கியில் உள்ளது. டில்லியில் அவருக்கு எந்த வித வங்கிக்கணக்கும்
இல்லை. பிரதமருக்கு எந்தவித கடனும் இல்லாத நிலையில், 45 கிராம் எடை கொண்ட 4
தங்க மோதிரங்கள் மட்டும் அவரது சொத்தில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.1.19
லட்சம் ஆகும். கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 18ல் வெளியிடப்பட்ட இதன்
மதிப்பான ரூ.1.21 லட்சத்திலிருந்து ரூ.1.19 லட்சமாக குறைந்துள்ளது.

எல்
அன்ட் டி இன்பரா பத்திரங்கள் (வரி சேமிப்பு) ரூ.20,000, தேசிய சேமிப்பு
சான்றிதழ்கள் வகையில் ரூ.5.45 லட்சம், ஆயுள் காப்பீடு பாலிசிகள் மதிப்பு
ரூ.1.99 லட்சம் ஆகியவை சேர்ந்து பிரதமர் மோடியின் அசையும் சொத்துக்களின்
மதிப்பு ரூ.41.15 லட்சம் ஆகும். அசையாச்சொத்து வகையில், காந்திநகரில் உள்ள
வீட்டில் இவரது பங்கான 3,531 சதுர அடி பரப்பில் 169.81 சதுர அடி கட்டுமான
பகுதியுடன் கூடிய இடம் அடங்கும். இது வழிவழியாக வந்த சொத்தல்ல என
குறிப்பிட்டுள்ள பிரதமர், இது கடந்த 2002 அக்டோபர் 25ல் வாங்கப்பட்டுள்ளது
எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சொத்தை ரூ.1,30,488க்கு வாங்கியவிலை
எனவும், கட்டுமான பணிகளுக்கானசெலவு ரூ.2,47,208 என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget