அரசாங்கத்தின் ஒருசில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலர் சீனிகம ஆலயத்தில் இன்று பிரார்த்தனையில்
ஈடுபட்டனர்.
இந்த பிரார்த்தனைக்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடைபவனியாக ஆலயத்தை சென்றடைந்தனர்.
இதன்போது அவர்கள் தேங்காய் உடைக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதேவேளை, இந்தப் பிரார்த்தனையை ஏற்பாடு செய்த தரப்பினருக்கு எதிராக சிலர் நடை பயணம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இலங்கை தேசாபிமானி தேசிய முன்னணி இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இவர்கள் அம்பலாங்கொடையில் இருந்து சீனிகமவிற்கு நடைபயணமாகச் செல்ல முயற்சித்த போதிலும், பொலிஸார் அதனைத் தடுத்தனர்.
இறுதியில் அவர்கள் அம்பலாங்கொடை சாந்தி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு தொடர்ந்தும் இயங்க வேண்டும் என இவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Post a Comment