Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சங்கவிக்கு இன்று டும்.. டும்.. டும்...






1993-ம் ஆண்டில் வெளிவந்த ‘அமராவதி’ என்ற படத்தில் அஜித்குமார்
ஜோடியாக அறிமுகமானவர், சங்கவி.



விஜய் ஜோடியாக ‘ரசிகன்,’ ‘கோயம்புத்தூர்
மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து, ‘நாட்டாமை,’
‘கட்டுமரக்காரன்,’ ‘லக்கிமேன்,’ ‘சேலம் விஷ்ணு,’ ‘மன்னவா,’ ‘உளவுத்துறை,’
‘ரிஷி’ உள்பட பல படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.




கடந்த சில வருடங்களாக அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. சினிமாவை
விட்டு ஒதுங்கியிருந்தார். சங்கவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு
இருக்கிறது.



மணமகன் பெயர், வெங்கடேஷ். தொழில் அதிபர். சங்கவி-வெங்கடேஷ்
திருமணம் பெங்களூரில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணியில் இருந்து 10-30
மணிக்குள் நடக்கிறது. ‘‘இது, காதல் திருமணம் அல்ல. இரண்டு பேரின்
பெற்றோர்களாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.




திருமணத்துக்குப்பின், நான் தொடர்ந்து நடிப்பேன். அதற்கு என் கணவர் அனுமதி கொடுத்து இருக்கிறார்’’ என்று சங்கவி தெரிவித்தார்.







Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget