உதிரங்களை உறைய வைத்துஉயிர்களை உதிர்த்தெடுத்து வென்றெடுத்த
பெப்ரவரி நான்காம் நாள்
நாற்பத்தெட்டாம் ஆண்டு எம் நாட்டை
நாம் சுதந்திர நாடு என மகுடம் சூடிய நாள்
நள்ளிரவில் பெற்றோம் சுதந்திரத்தை
விடியலை நோக்கிச் சென்றோம்
தடைகள் ஆனாலும் ஆனதுதான்
தயங்கி நிற்க தயாரில்லை
வென்றோம் விடியலை
உழைப்போம் நாட்டின் வளர்ச்சிக்காய்
காலணித்துவ ஆட்சியிலிருந்து
கால்பதித்தோம் சுதந்திர நாட்டிற்கு
தியாகச் செம்மல்கள்
தேடித் தந்த தேட்டமிதால்
கண்டெடுத்தோம் எம் சுயாதீனத்தை
சிங்களவர், தமிழர்,முஸ்லிம், பறங்கியர் என
இனவாதம் மதவாதம் ஒழித்து
ஒரே தேசம் ஒரே நாடு ஒரே மக்கள் என
ஒன்றிணைவோம்
அறுபத்தெட்டாவது சுதந்திரக் காற்றை
சுயமாக சுவாசிப்போம்
இலங்கைத் திரு நாடு
இலங்கத் தொடங்கிய தொரு பாடு
போத்துக்கேயர் போர்த்தி வைத்ததையும்
ஒல்லாந்தர் ஒழித்து வைத்ததையும்
ஆங்கிலேயர் ஆங்காங்கே ஆக்கி வைத்ததையும்
அஹிம்சை வழி வென்றெடுத்ததுவே
நாட்டுப் பற்றுடன் நாமனைவரும்
இணைவோம் ஒரு தாய் மக்கள் என
ஒன்றிப்போம் ஓசையிடுவோம்
இலங்கை வாழ் மக்களனைவரும்
இன்பமாய் வாழ்வோம்.
றிப்அன்ஸி
04.02.2016

Post a Comment