Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கவனிப்பாரற்ற சாய்ந்தமருது MPCS வளவிற்கு விடிவுகாலம் பிறந்தது.


வரைவுள்ள சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கதத்தின் SM/01 கிளைக்குரிய களஞ்சிய சாலை சுமார் 10 வருட காலமாக இனம்காண முடியாத அயலவர்களாலும், ஏனையவர்களாலும் குப்பைகள், கழிவுப்பொருட்கள், மரக்கிளைகள் போன்றவை கொட்டப்பட்டு, குப்பை மேடாக காட்சியளித்ததுடன், நுளம்புகள் பெருகுவதற்கும், விச ஜந்துகள் குடியிருப்பதற்கும் ஏதுவாகக் காணப்பட்டது. இதனால் அயலவர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.



இந்நிலைமைக்கு இன்று (04) தீர்வு காணப்பட்டுள்ளது.



கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளரால் நியமனம் செய்யப்பட இத் திணைக்கள உத்தியோகத்தர்களான எம்.ஐ.எம்.பரீட் (தலைவர்), ஏ.எம்.ஜப்பார் (இ.ம.உ), எம்.எம்.நிஜாமுத்தீன் (இ.ம.உ), ஆகியோரத அயராத முயற்சியின் பயனாக இதன் துப்பரவுப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.



இதற்காக வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் வழங்கிய கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் (கி.மா.) திரு. திவாகர சர்மா அவர்களையும், திணைக்கள தலைமை அலுவலக கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருமதி. இராஜினி அவர்களையும், தற்போதய இயக்குனர்களுக்கும் அயலவர்கள் நன்றியுடன் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.





 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget