-எம்.வை.அமீர்-
கடந்த மூன்றரை வருடங்களாக
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியாகக்
கடமையாற்றிய வைத்தியக் கலாநிதி என். ஆரிப் வருடாந்த இடமாற்றத்தை அடுத்து
கல்முனைப் பிராந்திய தொற்று நோய்த்தடுப்புப் பிரிவுக்குப்
பொறுப்பான வைத்திய அதிகாரியாக தனது கடமைப்பொறுப்பினை கடந்த 18. 03. 2016 வெள்ளிக்கிழமை
ஏற்றுக்கொண்டார்.
இவருடைய காலப்பகுதியில்
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை பலவிதமான
அபிவிருத்திகளைக் கண்டதுடன், நோயாளர்கள்
திருப்திகரமான சேவையைப் பெற்றுக்கொண்டைதை பலரது கருத்துக்களின் மூலம் அறிந்து
கொள்ளக்கூடியதாக உள்ளது. குறிப்பாக,
உள்ளக வீதி புனரமைப்பு, மருந்தகத்தின் புனர்
நிருமானம், வெளிநோயாளர் பிரிவுக் கட்டட விஸ்தரிப்பு, நோயாளர்களை
உபசரிக்கின்ற முறைமையில் மாற்றம்,
தொடர்ச்சியாக மருந்து உறைகளைப் பாவித்து
வருதல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இதற்கு முன்னர், இவர், நாவலப்பிட்டி ஆதார
வைத்தியசாலை, மூதூர் மாவட்ட
வைத்தியசாலை, கேகாலையில் பெலிகல
கிராமிய வைத்தியசாலை, கொழும்பு தேசிய
வைத்தியசாலை மற்றும் சவுதி அரேபிய
அப்கைக் நகர தனியார் வைத்தியசாலை
என்பவற்றில் கடமையாற்றி சிறந்த
அனுபவத்தைக் கொண்டிருப்பதும்
குறிப்பிடத்தக்கது. விசேடமாக, எலும்பு முறிவு
மற்றும் மூட்டு வியாதிகளில்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பல
வருடங்கள் கடமையாற்றி நல்ல அனுபவத்தைப்
பெற்றுள்ளார்.
தற்போது கடமையேற்றுள்ள
பொறுப்பானது கல்முனைப் பிராந்தியத்திலுள்ள
பதின்மூன்று சுகாதார வைத்திய
அதிகாரிகள் பிரிவுகளிலும் தொற்று நோய்த்தடுப்பு சம்மந்தமான நடவடிக்கைகளோடு
சம்மந்தப்பட்டதாகும். இந்தப் பிரிவுக்கு இவரின் நியமனம் காலத்துக்குப்
பொருத்தமானதுடன், இவர் சிறப்பாகச்செயற்பட்டு இந்தப் பிராந்தியத்தில்
தொற்று நோய்த்தடுப்பில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம் என்றும் நம்பிக்கை
தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment