சிறு வயதிலிருந்தே சகல சமயங்களையும் அனைவரும் மதிக்கப்பழகிக் கொள்ள வேண்டும். என்றார் அதிபர்.
கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இன்று(31) இடம் பெற்ற புத்தாண்டு விழாக்கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய மேற்படி பாடசாலையின் அதிபர் யு.எல்.எம்.அமீன் மேற்கண்டவாறு கூறினார்.
தரம் ஒன்று மாணவர்களின் பாடத்திட்டத்திற்கமைய இன்று காலையில் மாணவர்கள் புத்தாடை அணிந்து பாடசாலை வளாகத்தில் தேசிய மற்றும் பாடசாலைக் கொடிகள் ஏற்றப்பட்டு சிறார்களால் தேசியக் கீதம்,பாடசாலைக் கீதங்கள் இசைக்கப்பட்ட பின் மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று விழா மண்டபத்தில் விதவிதமான பலகாரங்கள் கொண்டு வந்து அதை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கி கலை நிகழ்ச்சியுடன் கொண்டாடப்பட்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் அதிபர் உரையாற்றுகையில்.......
இந்த சிறு வயதிலிருந்தே சகல சமயங்களையும் அதன் சம்பிரதாயங்கள் மற்றும் சமயம் சார்ந்த விழாக்களையும் அறிந்து அனைவரும் மதிக்கப்பழகிக் கொள்ள வேண்டும்
அப்படிவாழும் வாழ்க்கையில்தான் நல்ல மனிதநேயங் கொண்ட எதிர்கால நல்ல மனிதனை உருவாக்க முடியும்.
சிறு வயதுச் செயற்பாடுகள் பச்சமரத்தணி போன்றது. என்றும் மறக்க முடியாதது. அப்படிப்பட்ட வயதில் உள்ள நீங்கள் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதன் மூலம் ஏனைய சமயங்களினது நிகழ்வுகளை அறிந்து கொள்ளுதல் அவர்களுடன் உறவுகளை ஏற்படுத்தி நல்ல நற்பை உங்கள் குடும்பத்ததுடன் மேற்கொள்ளல் எல்லாம் கலத்துக்கு தேவையான நல்ல விடயமாகும். ஆகவே இவ்விழாவை ஏற்பாடு செய்த ஆரம்பப் பிரிவு பகுதித்தலைவர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றிகளையும் கூறினார்.
இந்நிகழ்வு ஆரம்பபிரிவு பகுதித்தலைவர் ஏ.ஆர்.எ.லத்திப் தலைமையில் தரம் ஒன்று வகுப்பு ஆசிரியர்களான ஐ.எல்.றும்மான்,ஏ.ஸாஹிறா,எம். எம்.எப்.றிஸானாe மற்றும் எம்.வை.ஸாஹிறா வேகம் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Post a Comment