கல்முனை சாஹிராக் கல்லூரியில் 99 ஆம் ஆண்டு கல்வி கற்ற பழைய மாணவர் அமைப்பான ”செஸ்டோ” ZESDO (Zairians’
Education & Social Development
Organization) அமைப்பானது, 2016 நடப்பு ஆண்டு தலைவர் எஸ்.எம். ஆரீஸ் அக்பர் (இலங்கை மின்சார சபை, மின் அத்தியட்சகர்) தலைமையில் இவ்வருடத்துக்கான முக்கிய வேலைத்திட்டமாக, இனம்காணப்பட்ட பின்தங்கிய பாடசாலைகளுக்கு உதவுதல் போன்ர இன்னும் பலவகையான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இயங்கி வருகின்றது.இவ்வாண்டுக்கான 1வது வேலைத்திட்டமாக சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலய அதிபரின் வேண்டுகோளின் அடிப்படையில் இப்பாடசாலைக்காக குடிநீர், குழாய் புனருத்தாபன வேலைத்திட்டம் (Drinking Water and Wash Basin Scheme) ஒன்று நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வு இன்று (21) கல்லூரியில் அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த வேலைத்திட்டம் மாணவர்கள் பாவனைக்காக அதிபரிடம் ”செஸ்டோ” தலைவர் மற்றும் அங்கத்தவர்களினால் கையளிக்கப்பட்டதுடன், மேலும் பாடசாலையின் கேட்போர் கூடத்துக்கு இரண்டு மின் விசிறிகள், சிறிய மாணவர்கள் நீர் அருந்துவதற்கான வாளிகளும் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ”செஸ்டோ” அமைப்பின் நடப்பாண்டு தலைவர் எஸ்.எம். ஆரீஸ் அக்பர், செயலாளர் சதாத், பொருளாளர் இர்ஷாத், அமைப்பின் முன்னாள் தலைவரும் பிராந்திய மின் பொறியியலாளருமான எம்.ஆர்.எம்.பர்ஹான், பாடசாலையின் பி.எஸ்.ஐ.இணைப்பாளர் அன்வர் சித்தீக், அமைப்பின் உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உட்பட ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இங்கு ”செஸ்டோ” அமைப்பின்தலைவர் உரையாற்றுகையில் ..
எமது அமைப்பானது 2013 ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளைக் கடந்து, நான்காவது வருடத்தில் வெற்றிகரமாக காலடியெடுத்து வைத்துள்ளது.
இவ் அமைப்பானது கல்வி, சமூக ரீதியான பல்வேறு சேவைகளை பல்வேறு சமூக ரீதியான குறிக்கோள்களை மையமாக கொண்டு தூர நோக்கு சிந்தனையுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது.
சமூகத்தின் கல்வி, கலை, கலாசார அபிவிருத்தியில் முடியுமான அளவில் பங்களிப்பு செய்துகொண்டு வருகின்றது.
சமூகத்தின் தேவைகளை இனங்கன்டு அவற்றைச் செய்யத்துடிக்கும் எமது செஸ்டோ அமைப்பு அல்லாஹ்வின் உதவியுடன், தங்களின் மேலான கரங்களை இணைப்பதன் மூலம் எமது சமூகத்தின் வளர்ச்சிக்கு சில விதைகளை இட்டுச்செல்லலாம் என்று எண்ணுகின்றது.
இதுவரை காலமும் எமது அமைப்பினால் கீழ் வரும் சேவைகள் சமூகத்திற்காக எடுத்துச்செல்லப்படிருக்கின்றன.
ஜனாஸாவினை கொண்டுசெல்வதற்கான அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து அல்லாஹ்வின் உதவியுடன் வெற்றிகரமாக அதனை மக்களின் பயன்பாட்டிற்காக செயற்படுத்தப்படுகின்றது.
கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் சுமார் 80க்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலாரும் பங்குபற்றிய இரத்ததான முகாம் ஒன்றை வெற்றிகரமாக செய்துமுடிக்கப்பட்டது.
சய்ந்தமருது அக்பர் மையவாடியினை எமது அமைப்பின் அனைத்து உறுப்பினர்களின் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டமை.
அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்ட இனம் தெரியாத ஜனாஸா ஒன்றை எமது செஸ்டோ அமைப்பினர் அடக்கம் செய்தமை.
எமது அமைப்பின் அனைத்து உறுப்பினர்களின் உதவியுடன் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் சிரமதானப் பணியில் ஈடுபட்டமை.
இது போன்ற இன்னோரன்ன சேவைகளை அல்லாஹ்வின் உதவியுடன் எமது செஸ்டோ அமைப்பு செய்துகொண்டு வருகின்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ..
இத்திட்டத்துக்காக உதவி வழங்கிய அனைத்து நல் உள்ளம் படைத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், இந்த பாடசாலையின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிபர்
மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது செஸ்டோ அமைப்பின் தலைவர், அங்கத்தவர்கள், மற்றும் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த பாடசாலையின் அதிபர் எம். ஐ. சம்சுதீன் அவ்வமைப்பின் சேவையை பாராட்டிநினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கிவைத்தார்.









Post a Comment