Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

SPORTS | கோலாகலமாக நிறைவு பெற்ற கல்முனை ஸாஹிறா இல்ல விளையாட்டுப் போட்டி (வீடியோ)

-ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர், எம்.ஐ.எம்.அஸ்ஹர், யூ.கே.காலித்தீன்-
கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இன்று (01) செவ்வாய்ககிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம்.பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வுக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.றகுமான், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி என்.ஆரிப் உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பெரும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதி பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட அதிதிகளுக்கு பாடசாலை நிர்வாகத்தினரால் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.

இதன்போது மாணவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள், அஞ்சலோட்டப் போட்டிகள், மாணவர்களின் அணி வகுப்பு மற்றும் கராட்தே உடற்பயிற்சி நிகழ்சிகளும் இடம்பெற்றன.

நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் 222 புள்ளிகளைப் பெற்று ஹிறா இல்லம் இவ்வருடத்திற்கான சம்பியனானது. 219 புள்ளிகளைப் பெற்று சபா இல்லம் இரண்டாம் இடத்தையும், 214 புள்ளிகளைப் பெற்று அறபா இல்லம் மூன்றாம் இடத்தையும் 213 புள்ளிகளைப் பெற்று மர்வா இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றன.

இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்களை பிரதி அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

 - வீடியோ-




 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget