கடந்த ஒரு மாத காலமாக முன்னாள்
கிழக்குமாகாணசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும்
இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல், சாய்ந்தமருதில்
மேற்கொண்ட கிராமமட்ட கிளைகளை
அங்குராப்பணம் செய்துவைக்கும் நிகழ்வைத்தொடர்ந்து 2016-04-02 ஆம்
திகதி கலாநிதி ஏ.எம்.ஜெமீலுடைய இல்லத்தில் இடம்பெற்ற சாய்ந்தமருது மத்திய குழுவை ஸ்தாபிக்கும்
நிகழ்வில் வைத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாத்
பதியூதீனினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்
ஏ.எல்.எம்.அன்வர் ஹாஜியார் சாய்ந்தமருதுக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின்
தவிசாளர் பிரதி அமைச்சர் அமீர் அலி அறிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின்
தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீலுடைய தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம
அதிதியாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து
கொண்டார். அதேவேளை திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கட்சியின் தேசிய
அமைப்பாளர், அப்துல்லாஹ் மஹ்ருப் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய
செயலாளர் நாயகம் சுபைர் ஹாஜியார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்த அதேவேளை
இங்கு சாய்ந்தமருதுக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு
நிறுவாகிகளும் தெரிவு செய்யப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டனர்.

Post a Comment