சாய்ந்தமருது
- மாளிகைக்காடு பிரதான வீதியில் சதோச வர்த்தக நிறுவனத்தின் கிளையொன்று
இன்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
தேசிய தலைவருமான அல்ஹாஜ் றிஸாத் பதியுதீன் அவர்களால் திறந்து
வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர்
எம்.எஸ்.அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப் , நவவி
, அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவரும் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள்
கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ,அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் செயலாளர் நாயகம் அல்ஹாஜ் எஸ்.சுபைதீன் , கல்முனை மாநகரசபை
உறுப்பினர் ஏ.ஸி.முபீத் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாண
கொள்கை பரப்பு செயலாளர் எம்.எம்.ஜுனைதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





Post a Comment