-எம்.ஐ.எம்.அஸ்ஹர், யு.கே.காலித்தீன் , எம்.வை.அமீர் , யு.எல்.எம்.றியாஸ்-
கல்முனை
ஸாஹிர தேசியக்கல்லூரி முன்னாள் அதிபரும் ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளருமான
சாய்ந்தமருது கலாபுசணம் ஏ.பீர்முகம்மது எழுதிய திறன்நோக்கு நூல் வெளியிட்டு
விழா இன்று சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில்
இடம்பெற்றது.,
கலாபுசணம் யு.எல்.அலியார் தலைமையில் இடம்பெற்ற
மேற்படி நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஸாத் பதியுதீன்
பிரதம அதிதியாகவும் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர்அலி ,
பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப் , நவவி , அரச வர்த்தக
கூட்டுத்தாபன தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் , சாய்ந்தமருது பிரதேச செயலாளர்
ஏ.எல்.எம்.சலீம் , பிரபல தொலைக்காட்சி வானொலி அறிவிப்பாளரும் அதிபருமான
ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
நூலின்
முதல் பிரதியினை மோட்டார் வாகன பரிசோதகர் பொறியியலாளர் ஏ.எல்.எம்.பாறூக்
பெற்றுக் கொண்டதுடன் நூலுரையினை கவிஞர் நவாஸ் சௌபி மற்றும் தென்கிழக்கு
பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர்
நிகழ்த்தினார்கள்.



Post a Comment