மாணவர்கள் மத்தியில்
காணப்படும் கண் பார்வை குறைபாட்டினை பாடசாலை
ஆசிரியர்களும் பெற்றோர்களும் அடையாளம் கண்டு உரிய காலத்தில் அதற்கான பரிகாரத்தை காண
வேண்டும்.
இவ்வாறு கல்முனை
அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கல்முனை வைத்தியசாலை
கண் சிகிச்சைப் பிரிவு ”2020 ஆண்டில் சகலருக்கும் பார்வை”
எனும் தொனிப்பொருளில் கல்முனை பிரதேச பாடசாலை
மாணவர்களுக்கு இன்று சனிக்கிழமை (9) ஒழுங்கு செய்திருந்த இலவச கண் சிகிச்சை
முகாமில் கலந்து கொண்ட வைத்தியசாலை கண் சிகிச்சை வைத்திய
அதிகாரி டாக்டர் அல் அமீன்
றிஸாத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும்
கருத்து தெரிவிக்கையில்,
தற்காலத்தில் நவீன
தொலைத்தொடர்பு சாதனங்களின் அதீத பாவனை , முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் , கபலநிலையில்
ஏற்படும் திடீர் மாற்றம் காரணமாக பாடசாலை மாணவர்களிடையே கண் பார்வையில் மாற்றம் ஏற்படுகின்றது.
இது ஆரம்பத்தில் சிறிதாக இருந்து பின்னர் படிப்படியாக அதிகரித்துச் செல்கின்றது. குறைபாடுகள்
அடையாளம் காணப்பட்டவுடன் வைத்திய அதிகாரிகளை அணுகி அதற்கான பரிகாரத்தைப் பெற்றுக் கொள்ள
வேண்டும்.
மாணவர்கள் தம்மிடமுள்ள
குறைபாட்டினை கூறுவதற்கு அஞ்சுவார்கள். இதனை அடையாளம் காணக்கூடியவர்கள் பெற்றோர்களும்
ஆசிரியர்களுமாகும்.
அரசாங்கம் நாட்டிலுள்ள
மக்களிடம் காணப்படும் கண் பார்வையினை அடையாளம் கண்டு அவற்றுக்கு தகுந்த சிகிச்சை வழங்குவதன்
மூலம் 2020 ஆம் ஆண்டில் முற்றாக கண் பார்வை குறைபாட்டு நோயை இல்லாமல் செய்வதற்கான திட்டங்களை
வகுத்து மூக்கு கண்ணாடி பெற வசதியில்லாதவர்களுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடி வழங்குவதற்கான
ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது.
பாடசாலைகளில் கல்வி
பயிலும் மாணவர்கள் கண்பார்வை குறைபாடு காரணமாக படிப்படியாக தமது கல்வியில் அக்கறை செலுத்துவதனை
குறைத்து வகுப்பில் பின்வரிசையில் அமர்ந்து கல்வி கற்க ஆரம்பிக்கின்றனர். இதனால் வகுப்பில்
கரும்பகையில் ஆசிரியர் எழுதும் எந்தவொரு விளக்கத்தினையும் பெற முடியாத நிலையிலும் ஏனைய
மாணவர்களின் முன்னேற்றதுடன் தாக்கு பிடிக்க முடியாமல் நாளடைவில் பாடசாலையில் இருந்து
இடைவிலகி விடும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றது.
ஆசிரியர்கள் வகுப்புகளிலுள்ள
மாணவர்களின் குறைபாடுகளான கேட்டல் மற்றும் பார்வை விடயங்களில் கூடிய அவதானம் செலுத்தி
இம்மாணவர்களை முன்வரிசையில் வைத்து கல்வி கற்பிப்பதுடன் குறிப்பிட்ட மாணவர்களின் பெற்றோருடன்
தொடர்பு கொண்டு தகுந்த வைத்திய பரிசோதனைக்கு அம்மாணவர்களை உட்படுத்த வேண்டும். மூக்கு
கண்ணாடி பெறுவதற்கு வசதியில்லாத மாணவர்களுக்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் சமூக சேவை
அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு அதற்கான எற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.
இன்று உலகத்தில்
ஏற்பட்டு பாரிய நவீன தொழலத்தொடர்பு சாதனங்களின் பாவனையில் சிறுவர் முதல் வயோதிபர்களும்
பங்கேற்று வருகின்றனர். சில இடங்களின் பெற்றோரின் கண்காணிப்பு குறையும் போது மாணவர்கள்
இரவில் நடுநிசி வரை வழித்திருந்து தொலைக்காட்சி , தொலைபேசி மற்றும் ஏனைய சாதனைங்களில்
மூழ்கியிருக்கின்றனர். மறுநாள் பாடசாலைக்கு செல்லாமல் பகல் முழுவதும் தூங்கி காலத்தை
கழிக்கின்றனர். இந்த விடயத்தில் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். என்று தெரிவத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை
அஸ்றப் ஞாபகார்தத வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர்
ஏ.எல்.எப்.றஹ்மான் , டாக்டர் எம்.எஸ்.தாஸிம் , தாதி உத்தியோஸ்தர்கள் , பாடசாலை அதிபர்கள்
, ஆசிரியர்கள் , மாணவர்கள் , மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.





Post a Comment