-ஹாசிப் யாஸீன்-
கல்முனை ஸாஹிறா கல்லூரியில் கடந்த 2015ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற, பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு “We are Zahirian” அமைப்பின் ஏற்பாட்டில் “ஸஹிரியன் விருது” வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (14) எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.
“We are Zahirian” அமைப்பின் தலைவர் றிசாத் ஷரீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.றகுமான், கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம்.பதுர்தீன், கல்லூரியின் முன்னாள் அதிபர் சட்டத்தரணி எம்.சீ.ஆதம்பாவா, முன்னாள் அதிபர் எம்.ஐ.எம்.இஸ்மாயில் உள்ளிட்ட பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற, பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு நிகழ்வின் அதிதிகளால் நினைவுச் சின்னம், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் விசேட அம்சமாக கல்முனை ஸாஹிராக் கல்லூரியினை கல்வித்துறையில் தேசிய ரீதியில் புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற ஓய்வு பெற்ற அதிபர் சட்டத்தரணி எம்.சீ.ஆதம்பாவா பிரதி அமைச்சர் ஹரீஸினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் கல்முனை ஸாஹிராவின் கல்வி வளர்ச்சிக்கு நேரடியாக பங்களிப்பு செய்து வரும் பிரதி அமைச்சர் We are Zahirian” அமைப்பினரால் நினைவுச் சின்னம் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

Post a Comment