(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (1) ஞாயிற்றுக் கிழமை சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேரவையின் சகல உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது பேரவையின் தலைவர் கலாபூணம் எம்.ஏ. பகுர்தீன் உரையாற்றுகையில் எமது அமைப்பினூடாக ஊடகவியலாளர்களின் நலன் கருதி பல கருத்தரங்குள் மற்றும் பயிற்சிநெறிகளை நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். அதனூடாக ஊடகத்துறையை கட்டியெழுப்பி சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்கமுடியும் எனவே எமது பேரவையினூடாக மேற்கொள்ளப்படவிருக்கின்ற நல்ல திட்டங்களுக்கு ஊடகவியலாளர்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அத்தோடுட ஊடகவியலாளர்களாகிய நாம் ஊடகத்துறையோடு மாத்திரம் தங்களது பணிகளை சுருக்கிக்கொள்ளாது சமூகப்பணிகளிலும் ஈடுபட வேண்டும். தங்களது பிரதேசத்திலுள்ள வறிய மக்களை இனங்கன்டு அவர்களுக்கு எங்களால் முடியுமான உதவிகளைச் செய்ய வேண்டும். தற்போது எங்களது பேரவையின் ஊடாக அம்பாரை மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதிகளைப் பெற்றுக் கொடுக்கத் தீர்மாணித்துள்ளோம். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment