சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக
பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை
வழங்கியுள்ளார்.அனர்த்தங்களுக்குள்ளான பகுதிகளில் இடம் பெறக்கூடிய திருட்டு சம்பவங்கள் மற்றும் குற்றங்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் இன்றில் இருந்து தாழ் நிலங்களில் மண் நிரப்பி விற்பனை செய்வது தடை செய்யப்ட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட சூழல் பாதிப்பை முகாமைத்துவம் செய்வதற்கு விசேட சூழல் நிவாரண செயலணியொன்றை நியமிப்பிதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் வாழ்க்கைக்கு ஏற்ற சூழலொன்றை ஏற்படுத்துதற்கான நடவடிக்கைகள் இதனூடாக முன்னெடுக்கப்படவுள்ளன
அனர்த்த நிலைமையினால் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை முகாமைத்துவம் செய்வதற்கு, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடல் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபை,அனர்த்த முகாமைத்து அமைச்சு,முப்படையினர்,பொலிஸார்,மாவட்ட செயலாளர்கள்,பிரதேச செயலாளர்கள் மற்றும் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்று சுயாதீன அமைப்புக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் குறித்த செயலணியை உருவாக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
வௌ்ளம் வடிந்தோடி வரும் நிலையில் மக்கள் முகங்கொடுக்கும் டெங்கு போன்ற நோய்களை தடுப்பது குறித்தும் அவதானம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி இதன் போது மேலும் அறிவுறுதியுள்ளார்.

Post a Comment