நூறுல் ஹக் எழுதியுள்ள
'முஸ்லிம் அரசியலின் இயலாமை' என்ற நூல் ஒட்டுமொத்த அரசியல் வாதிகளின் இயலாமையை குறிப்பதாகவும், எங்களுக்கு இடையிலான ஒற்றுமை இல்லாது இருப்பதையே இந்நூல் சுட்டிக்காட்டுவதாக தான் பார்ப்பதாக இப் புத்தக வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்கி நடத்திய முன்னாள் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எஸ். நஜிமுதீன் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் இலங்கை முஸ்லிம்களை தலைமை தாங்கக்கூடிய
கட்சி என்றால் அது முஸ்லிம் காங்கிரஸ்தான் என்று தெரிவித்த டாக்டர்
நஜிமுதீன், இக்கட்சியை விமர்சிப்பவர்களுக்குக்கூட இந்த உண்மை தெரியும் எது
எவ்வாறு இருந்த போதிலும் அக்கட்சிக்கு எதிராக யாரும் பெரிதாக எதனையும்
சாதித்துவிட முடியாது என்றும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பண்நூல் ஆசிரியர் நூறுல் ஹக் எழுதியுள்ள
'முஸ்லிம் அரசியலின் இயலாமை எனும் புத்தக வெளியிட்டு விழா கடந்த ( 21) ம் திகதி நடைபெற்றது.
'முஸ்லிம் அரசியலின் இயலாமை எனும் புத்தக வெளியிட்டு விழா கடந்த ( 21) ம் திகதி நடைபெற்றது.
இதன் போது கடந்த காலங்களில் அரசியலில் பதவிகளை
வகித்த முஸ்லிம் தலைவர்களே மக்களால் தலைவர்களாக
பார்க்கப்பட்டதாகவும் 1985களின் பின்னர், ஆரம்பத்தில் பதவிகள் எதுவும்
இல்லாமலேயே முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மறைந்த மாமனிதர் மர்ஹூம்
அஷ்ரப் அவர்கள் தலைவராக பிரகடனப்படுத்தப்பட்டதாகவும், குறித்த அந்த
தலைமைத்துவத்துக்கு ஈடு இணையான தலைமைத்துவத்தை இன்று வரைக்கும்
காணமுடியவில்லை.
இருந்தும் தற்போதுள்ள முஸ்லிம் தலைமைத்துவங்களுடன்
ஒப்பிடும்போது தற்போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருக்கின்ற அமைச்சர்
ரவூப் ஹக்கீம் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு ஈடாக ஓரளவு
ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருப்பது தனது அசைக்கமுடியாத நம்பிக்கை என்றும்
தெரிவித்தார்.
அதேவேளை, ஏனைய முஸ்லிம் தலைவர்கள், தங்களது ஆளுமைகளை நிலைநிறுத்துகின்ற
முயச்சியில ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதுவரையும் முஸ்லிம் சமூகத்தை தலைமை தாங்கும் அரசியல்
வாதிகளால் முஸ்லிம் சமூகத்தின் எதிப்பார்ப்புகள் முடக்கப்பட்டுள்ளதா? என்று
கேட்கப்படுமானால் இல்லை என்று தான் கூறமுடியும். என்பதே தனது கருத்து
என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment