கிழக்கு மாகாண வைத்தியசாலைகளின் அபிவிருத்திற்கு மாகாண
சுகாதார பணிப்பாளரும், அவரது அலுவலகமும் தடையாகவுள்ளது என சுகாதார, சுதேச
வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசீம் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபையினருடனான சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வு சாய்ந்தமருது மாவட்ட வைத்திய அதிகாரி ஜெசீல் இலாஹி தலைமையில் இன்று(28) வைத்தியசாலை கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதி
அமைச்சர் பைசால் காசீம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில்
திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்பானம் மற்றும் அம்பாறை மாவட்டங்களின்
வைத்தியசாலைகளை பார்வையிட்டோம். வைத்தியசாலை அபிவிருத்திற்கான மதிப்பீட்டு
அறிக்கைகளை கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்திடமிருந்து
கோரியிருந்தோம். ஆனால் மதிப்பீட்டு அறிக்கைகள் இன்றுவரை கிடைக்கவில்லை.
அவைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளனவா? அல்லது இனவாதமா? என்பது இன்னும்
தெரியவில்லை. இதனால் இவ்வைத்தியசாலைகளுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்வதில் பல
சிரமங்களை எதிர்நோக்குகின்றோம்.
எமது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட
வைத்தியசாலைகளில் நிறைய குறைகள் காணப்படுகின்றன. அவைகளை நிவர்த்தி செய்ய
ஏதாவது உதவி செய்ய வெளிக்கிடும் போது இவ்வாறான சவால்களை எதிர்நோக்கவுள்ளது.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பதை
நானும், அமைச்சர் ராஜிதவும் இணைந்து நிவர்த்தி செய்யவிருக்கிறோம் எனவும்
பிரதி அமைச்சர் பைசால் காசீம் தெரிவித்தார்.
எது எவ்வாறு இருப்பினும் நானும் அமைச்சர் ராஜிதவும்
பிரதேசவாத, மதவாத்திற்கு அப்பால் நின்று செய்யக்கூடியவர்கள் என்றும்
தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் பைசால் காசீம் வைத்தியசாலையின் பழுதடைந்துள்ள
உபகரணங்களையும் பாரிவையிட்டு பழுத்டைந்துள்ள உபகரணங்களுக்கு பதிலாக புதிய
உபகரணங்கள் தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.
இச் சந்திப்பின் போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர், சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின்
அபிவிருத்தி சபை உறுப்பினர்கள்
உட்பட அமைச்சரின் அதிகாரிகளும் கலந்து கொண்டதோடு வைத்தியசாலை அபிவிருத்தி
சபையினரால் வைத்தியசாலையின் தேவை தொடர்பான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.






Post a Comment