சாய்ந்தமருதில் ஆயுர்வேத மத்திய மருந்தகத்திற்கான புதிய
கட்டிடத் திறப்பு விழா இன்று (28)கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச
வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு
திறந்து வைத்தார்
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
கே.எம்.ஏ.ஜவாத், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல். அப்துல் மஜீத், கிழக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதர், சாய்ந்தமருது
பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், ஆயுர்வேத வைத்தியர்களான எம்.ஏ.நபீல்,
எம்.வை.இஷாக் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.






Post a Comment